தீனி போட வந்தவரை தீனியாக்க பார்த்த முதலை வீடியோ வைரல்
முதலை பண்ணையில் தீனி போட வந்தவரை முதலை ஒன்று தாவிப் பிடித்து தீனியாக்க முயற்சி செய்த வீடியோ வைரலாகியுள்ளது.
மீன் பண்ணையில் வளர்க்கப்படுவதுபோல் முதலைகளும் வெளிநாட்டில் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. ஒரே குட்டையில் பல நூறு முலைகள்கூட இருக்கும். அவற்றுக்கு கோழி மாமிசங்கள் தீனியாக கொடுக்கப்படும். முழுக் கோழி கூட உயிருடன் தூக்கிப் போட்டால் தண்ணீருக்குள் இருக்கும் முதலைகள் தாவி குதித்து அந்த கோழியை ஒரே வாயில் விழுங்கிக் கொள்ளும். அதையெல்லாம் நேரில் பார்த்தால் அடி வயிறு குலை நடுங்கிவிடும். ஏனென்றால் கொஞ்சம் கோரமாக தான் அந்த தாக்குதல் எல்லாம் இருக்கும். வாயில் பிடித்து கடிக்கும்போது, நம்மையே முதலை கடிப்பதுபோல் உள்ளுணர்வு குத்திக் குத்திக் காட்டும்.
அந்த சந்தர்ப்பத்தை ஒருவர் நிஜமாகவே அனுபவித்திருக்கிறார் என்றால் நீங்கள் நம்புவீர்களா?. உண்மையில் அதற்கான பதில் ஆம் ஒருவர் நேரடியாக அனுபவித்திருக்கிறார். முதலைப் பண்ணையில் தினமும் தண்ணீருக்கு அருகில் சென்று உணவுகளை தூக்கி வீச வேண்டும். அப்போது நீங்கள் அசால்டாக இருந்துவிடக்கூடாது. ஏனென்றால் முதலைகள் கரை ஓரத்திலேயே எந்தவித சமிக்கையும் காட்டாமல் படுத்திருக்கும். அதனுடைய தாக்குதல்களை எல்லாம் நீங்கள் கறபனை செய்துகூட பார்க்க முடியாது. கண்ணிமைக்கும் நேரத்தில் தண்ணீரில் இருந்து மேலெழுந்து தாக்கி, அந்த இரையை தண்ணீருக்குள் எடுதுச் சென்றுவிடும். யாரும் காப்பாற்றக்கூட முடியாது. காப்பாற்ற செல்பவர்களும் சேர்ந்து இரையாக நேரிடும்.
இப்படி ஒருவர் இரையாகியிருப்பார். ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்துவிட்டார். வைரலாகியிருக்கும் வீடியோவில் ஒருவர் எப்போதும் போல் முதலைப் பண்ணையில் இருக்கும் குட்டையில் வந்து உணவிடுகிறார். மாமிசத்தை அவர் தூக்கிபோடும்போது ஒரு முதலை மேலாக தான் இருக்கிறது. இருந்தபோதும் அந்த முதலை அவரை தாக்க வரும் என்று நினைக்கவில்லை. மாமிசத்தை தூக்கிபோட்டவுடன் அதனை பிடித்துக் கொண்ட முதலை அடுத்த நொடியில் அந்த நபருக்கும் குறி வைத்துவிடுகிறது. இதில் செம ஷாக்காகிவிடுகிறார் அவர். உடனே அந்த ராட்சத முதலையிடம் இருந்து தப்பிக்க, ஓட முயற்சிக்கும்போது கீழே விழுந்துவிடுகிறார்.
பீதியின் உச்சத்தில் இருக்கும் சமயத்தில் அவருடைய நண்பர் ஓடி வந்து முதலையிடம் இருந்து காப்பாற்றுகிறார். ஒரு சிலநொடிக்களில் இந்த சம்பவம் நடந்து முடிந்துவிடுகிறது. வீடியோவை பார்க்கும்போது உங்களுக்கே சில நொடிகள் நெஞ்சம் பதைபதைக்கும். இதுவரை இந்த வீடியோவை மில்லியன் கணக்கானோர் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.
மேலும் படிக்க | குட்டி நாகத்தை ‘லபக்’கென விழுங்கிய ராஜ நாகம்..! வைரலாகும் ‘திக் திக்’ வீடியோ..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ