வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்களை மக்கள் எப்போதும் விரும்பி பார்க்கிறார்கள். இதற்கு இவற்றில் காணப்படும் விலங்குகளின் வித்தியாசமான பாணியே காரணமாகும். இப்படிப்பட்ட ஒரு வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இது காண்பவர்களை முதலில் கதி கலங்க வைத்து பின்னர் வியக்க வைக்கிறது. 


ஆற்றின் கரையில் கோழி நின்று கொண்டிருப்பதையும், அதைப் பார்த்ததும் முதலை அதை நோக்கி ஓடி வருவதையும் வீடியோவில் காண முடிகின்றது. முதலை கோழியை வேட்டையாட உள்ளது என நாம் அஞ்சும் வேளையில் நாம் எதிர்பாராத ஒன்று நடக்கின்றது. முதலையால் கோழியை வேட்டையாட முடியவில்லை. 


மேலும் படிக்க | தம்பி... கிட்டதான் வர முடியும், பிடிக்கல்லாம் முடியாது: புலியிடம் யானை காட்டிய மாஸ், வைரல் வீடியோ 


முதலையால் கோழியை வேட்டையாட முடியவில்லை


சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், கோழி நடந்து ஆற்றின் கரையை அடைவதைக் காண்கிறோம். ஆனால் முதலை தன்னை கண்டுகொண்டதை அது அறியவில்லை. சரியான சமயம் கிடைத்தவுடன் முதலை அதை பிடிக்க செல்கிறது. முதலை கோழியை தாடையில் பிடித்தவுடன், அது துள்ளிக் குதித்து மறுபக்கம் செல்கிறது. மிகவும் வேகமாக செயல்பட்டதால், கோழியால் முதலையின் பிடியிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள முடிகின்றது. 


வியக்க வைக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:



முதலை மிகுந்த கவனத்துடன் நடந்துகொண்ட போதும், அதனால் கோழியை பிடிக்க முடியவில்லை. அதன் தந்திரம் கோழிக்கு முன்னால் எடுபடவில்லை. இந்த வீடியோ wild_animal_pix என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டது. இந்த வீடியோ இதுவரை மில்லியன் கணக்கான லைக்குகளையும் வியூஸ்களையும் பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். கோழியின் அதிர்ஷ்டத்தையும் முதலை ஏமாற்றம் அடைந்தது பற்றியும் கமெண்ட் செய்து வருகிறார்கள். 


மேலும் படிக்க | ஆட்டமா தேரோட்டமா... இது மயிலின் மயக்கும் ஆட்டம்... சொக்க வைக்கும் அற்புத வீடியோ! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ