வினோதமான பாணியில் மரம் ஏறும் மலைப்பாம்பு: ஷாக் ஆன நெட்டிசன்கள், வீடியோ வைரல்

Snake Viral Video: பாம்பு வீடியோக்களைப் பார்க்க விரும்பும் நபர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கானது. பாம்பு ஒன்று மரத்தில் ஏறும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 19, 2022, 05:06 PM IST
  • வீடியோவின் துவக்கத்தில் ஒரு மரத்தில் பாம்பு ஒன்று சுற்றி இருப்பதை காண முடிகின்றது.
  • சில நொடிகளில், பாம்பு மரத்தின் மீது விசித்திரமான முறையில் ஏறுவதைக் காண முடிகின்றது.
  • மரத்தின் மேல்பகுதியை நோக்கி நாகம் நகர்ந்து கொண்டிருக்கும் போது அதன் வேகம் மிக அதிகமாக உள்ளது.
வினோதமான பாணியில் மரம் ஏறும் மலைப்பாம்பு: ஷாக் ஆன நெட்டிசன்கள், வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுவும் பாம்புகளின் வீடியோ என்றால் கேட்கவே வேண்டாம்!! தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

பாம்பு வீடியோக்களைப் பார்க்க விரும்பும் நபர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கானது. பாம்பு ஒன்று மரத்தில் ஏறும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. @animal.angry என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் ஷார்ட் செக்மெண்டில் இதை பகிர்ந்துள்ளார். 

வீடியோவின் துவக்கத்தில் ஒரு மரத்தில் பாம்பு ஒன்று சுற்றி இருப்பதை காண முடிகின்றது. சில நொடிகளில், பாம்பு மரத்தின் மீது விசித்திரமான முறையில் ஏறுவதைக் காண முடிகின்றது. மரத்தின் மேல்பகுதியை நோக்கி நாகம் நகர்ந்து கொண்டிருக்கும் போது அதன் வேகம் மிக அதிகமாக உள்ளது. 

மேலும் படிக்க | மலையேற போனவரை தாக்க வந்த ராட்சத கரடி: திக் திக் நிமிடங்களின் வைரல் வீடியோ 

மலைப்பாம்பு மரத்தில் ஏறும் வீடியோ வைரலாக பரவி வருகிறது

மலைப்பாம்பு மரத்தின் உச்சியை அடையும் வரை, அது மரம் ஏறும் தனது வினோதமான பாணியை தொடர்கிறது. உயரமான மரத்தில் மடமடவென்று பாம்பு ஏறும் விதம் நெட்டிசன்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. மரத்தின் மீது மலைப்பாம்பு ஏறியதை பார்த்த சிலருக்கு அச்சமும் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ அக்டோபர் 3 ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டது. 

மரம் ஏறும் பாம்பு: வியக்க வைக்கும் வைரல் வீடியோ

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 (@animal.angry)

பகிரப்பட்டதிலிருந்து, இந்த வீடியோ 2.5 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களையும் எக்கச்சக்கமான லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவில் லைக்குகளும் வியூஸ்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நெட்டிசன்களும் இதற்கு பல விதமாக ரியாக்ட் செய்து வருகின்றனர். பெரும்பாலான பயனர்கள் வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர், சிலர் பாம்பின் இந்த பாணியை விரும்பி பாராட்டியுள்ளனர். 

இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகின்றனர். ஒரு பயனர், ‘எனக்கு இதை பார்க்க பயமாக இருக்கிறது, இனி இப்படிப்பட்ட மரங்களுக்கு அருகில் நான் செல்ல மாட்டேன்’ என எழுதியுள்ளார். 

மற்றொரு இன்ஸ்டாகிராம் பயனர், 'இந்த ஆபத்தான பாம்பு மேலே ஏறி விட்டது, ஆனால் அது எப்படி கீழே வரும்?' என்று சந்தேகத்தை எழுப்பியுள்ளார். 'அட.. இது மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தெரிகிறது' என்று மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார். 

மேலும் படிக்க | சரக்கடித்து போதையில் முழிக்கும் குரங்கு: குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News