ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு கடந்த 10 வருடமாக நடந்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சூதாட்ட புகார் காரணமாக கடந்த இரண்டு சீசனில் விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களமிறங்குகின்றன.


ஐ.பி.எல் தொடக்க விழா ஏப்ரல் 6-ந் தேதி மும்பை கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.


போட்டிக்கு முன்னரே ரசிகர்களை உற்சாகப்படுத்த முடிவு செய்த சென்னை அணி வீரர்களை வைத்து விளம்பரம் செய்ய துவங்கிவிட்டனர். சென்னை அணி தனது விளம்பர சூட்டிங்கை செய்து வருகிறனர். இந்நிலையில் தற்போது ரமணா பாணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரிட்டர்ன் மீம்ஸ் வீடியோ சமூக வளைத்ததில் வைரலாகி பரவி வருகிறது.