புலியிடம் பாசத்தை பொழிந்த சின்னப் பையன்... பதிலுக்கு புலி என்ன பண்ணுச்சு பாருங்க!
Cute Tiger Viral Video: மிருகக்காட்சிசாலையில் பயங்கரமான புலி ஒன்றுடன் சிறுவன் சேட்டை செய்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Cute Tiger Viral Video: சீனாவின் கிழக்குப் பிரதேசத்தல் உள்ள மிருகக்காட்சிசாலையில் மிகப்பெரிய புலி ஒன்றுடன் சிறுவன் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறுவனின் சேட்டையை மட்டுமின்றி புலியின் விளையாட்டுத் தனத்தையும் கண்டு நெட்டிசன்கள் இந்த வீடியோவை ரசித்து வருகின்றனர். வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து இதில் பார்க்கலாம்.
சீனாவின் செஜியாங் மாகாணத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஹுசௌ நகரில்தான் அந்த வீடியோவில் காணப்படும் மிருகக்காட்சிசாலை இருக்கிறது. அங்கு கடந்தாண்டு எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த மிருகக்காட்சிசாலையில் பிரம்மாண்ட தோற்றத்தில் இருக்கும் புலியுடன், ஒரு சிறுவன் விளையாடுவது அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.
புலியிடம் பாசத்தை பொழிந்த பையன்...
இருவருக்கும் இடையில் கண்ணாடி சுவர் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த கண்ணாடி சுவர் கொண்ட கூண்டில் புலி இருக்க, அந்த சிறுவனோ கண்ணாடியின் பக்கத்தில் நின்று அச்சமில்லாமல் புலியிடம் விளையாட்டு காட்டுகிறான். அந்த சிறுவன் செய்வதை பார்த்த புலியும், கண்ணாடி பக்கம் வந்து சிறுவனிடம் விளையாடுகிறது.