சாதனையாளர்களுக்கு எப்போதும் காரணம் சொல்வதே இல்லை. அவர்களுக்கான நூழிலை வாய்ப்பைக் கூட கெட்டியாக பிடித்து மேலேறியவர்கள் இங்கு ஏராளம். ஆனால் வாய்ப்புகளை சுற்றியிருந்தும், சதா காலமும் காரணம் சொல்லிக் கொண்டே வீட்டிற்குள் முடங்கியிருப்பவர்களுக்கு திறமையின் மூலம் கிடைத்த வெற்றியின் ருசியை உணரமாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை கடினமாக உழைத்துக் கிடைத்த வெற்றிக்கு கூட ஏதாவதொரு காரணத்தைக் கற்பித்துவிட்டு வீட்டிலேயே முடங்கிக் கொண்டிருப்பார்கள். அப்படி இருப்பவர்கள் எப்போதும் காலத்தின் அருமையையும், வெற்றியின் ருசியையும் உணரமாட்டார்கள். வாழ்க்கை நீரோட்டத்தில் கரைந்துபோய்விடுவார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மனதை மயக்கும் இயற்கையின் வண்ணங்கள்! பார்க்க பார்க்க வியப்பூட்டும் நீரூற்று! வீடியோ வைரல்


ஆனால் திறமையின் மீது நம்பிக்கைக் கொண்டு முயற்சிப்பவர்கள் படிக்கவில்லை என்றால் கூட அறிவு உலகத்தில் இருக்கும் இறக்கைகள் மீது பறந்து மரியாதை பெற்றுக் கொள்வார்கள். அப்படி திறமையாளர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருப்பவை தான் இன்றைய சமூக ஊடகங்கள். எங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று இருந்தவர்களுக்கு வாய்ப்பையும் உரிய அங்கீகாரத்தையும் கொடுக்கும் தளமாக அவை இருப்பதால் தினம் கோடி பேர் வீடியோக்கள் மூலம் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பகிர்ந்து வருகின்றனர். அதில் மிகவும் நன்றாக இருக்கும் வீடியோக்கள் பார்வையாளர்களின் கவனத்தைப் பெற ஒருபோதும் தவறுவதே இல்லை. 



அந்தவகையில் இப்போது பெண் திறமைசாலியின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அவரின் திறமையைக் கண்டு இன்ஸ்டாகிராம் உலகமே வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறது. அந்த வீடியோவில் ஜிம்னாஸ்டிக் தெரிந்த பெண் ஒருவர் அழகான பாவாடை ஒன்று அணிந்துக் கொண்டு சம்மர்சால்ட் அடிக்கிறார். அவ்வாறு அவர் அடிக்கும்போது பூவுக்குள் மறைந்த தேனீபோல காட்சியளிப்பதால், வீடியோவை பலரும் ரசித்துவிட்டனர். இதனால் டிரெண்டிங் லிஸ்டிலும் இடம் பிடித்திருக்கும் வீடியோவைக் கண்டு, அந்த இளம்  பெண் திறமைசாலிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ இதுவரை மில்லியன் கணக்கான பார்வைகளைப்பெற்றிருக்கிறது. வீடியோவில் இருக்கும் பெண்ணின் பெயர் சௌமியா சைனி. அவர் இதுபோன்ற பல வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார். 


மேலும் படிக்க | வேட்டைக்கு வந்த கருநாகத்தை தலையில் அடித்து கதறவிட்ட பூனை: வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ