இயற்கையின் இயற்கையான வைரல் வீடியோ: வாழ்க்கையில் மனதை லேசாக்கும் பணியில் இடைவிடாது தொடர்ந்து சேவை செய்து வரும் சமூக ஊடகங்களுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறோம்? என்ன இப்படி ஒரு கேள்வி என்று வினா எழுகிறதா? சமூக ஊடகங்களில் வெளியாகும் பல்வேறு செய்திகள் அறிவுக்கு தீனி போடுபவை. மனதில் இருக்கும் வருத்தங்களை போக்கும் மருத்துவராய் செயல்படும் இணையத்தை, இணக்கமில்லாமல் நன்றி மறந்து பேசலாமா?
சமூக ஊடகங்களில் வைரலாகி அனைவரையும் கவரும் வீடியோக்கள் மனதிற்கு இதமளிக்கின்றன. இணையத்தில் வெளியாகும் சில வீடியோக்கள் மனதை வருத்துகின்றன என்றால், சிலவற்றில் உபயோகமான தகவல்கள் இருக்கின்றன. இப்படி, சமூக ஊடகத்தை மையப்படுத்தியே வாழும் அளவுக்கு சமூக ஊடகங்கள் நமது வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்துவிட்டது.
சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல தகவல்களை வழங்கி வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் மனதை லேசாக்கும் வீடியோக்களும் நமக்கு போதையை ஏற்றுகின்றன. ஆனால், மறுபுறம் நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் உதவுகின்றன என்றல் அது மிகையாகாது.
அதிலும் இயற்கையின் பேரழகு அனைவரையும் மயக்குவது. ஏதாவது ஒரு அழகிய இயற்கை சூழலை யாராவது படமெடுத்தால், அதை உடனே சமூக ஊடகங்களில் பகிர்வது இன்றைய டிரெண்டிங். தற்போது இணையத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிஉம் அழகிய வீடியோ, அதிர்ச்சி கலந்த வியப்பை ஏற்படுத்துகிறது. அதிர்ச்சிக்கு காரணம், இப்படியும் ஒரு அழகா என்பது மட்டுமே....
இந்த வீடியோவைப் பார்த்தால், பிரமித்து போய், அடுத்து என்ன நடக்கிறது என்பதே மறந்து போய்விடுகிறது. மனதை கொள்ளைக் கொள்ளும் வண்ண நீரூற்றின் அசத்தும் அழகு.
பார்த்தாலே பரவசம் தரும் வீடியோவில், ஓடும் நதி, நீரூற்றாக மாறும் அழகை கழுகுப்பார்வையில் படம்பிடித்து, நமக்காக பதிவிட்டிருக்கிறார்களே என்று மகிழ்ச்சி ஏற்படுகிறது.
வண்ணமாய் அழகு கொஞ்சும் நதியின் வீழ்ச்சி
மனிதர்களை அதிக அளவில் பரவசப்படுத்தும் இயற்கையின் அதிசயங்களை வெவ்வேறு கோணத்தில் பார்த்தால், மாறுபட்ட அழகுணர்ச்சிகள் மனதில் வந்து மோதும். ஆனால், வெவ்வேறு வண்ணங்களில், ஒரு பட்டாடைப் போல, தோன்றும் இயற்கையான நதியின் அழகு திகைக்க வைக்கிறது.
வைரலாகி வரும் வீடியோவில், நதி அழகா, காடு அழகா இல்லை, அதை கழுகுப்பார்வையில் பார்ப்பது அழகா என்று தெரியவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரின் மனதையும் மயக்கிவருகிறது. அழகு மயக்கத்தில் மயங்கி, நெஞ்சம் கிறங்கி, மெய் மறந்து அழகே உன்னை ஆராதிக்கிறேன் என்று புலம்பாமல் இருந்தால் சரி...
மேலும் படிக்க | மனிதர்களை ரொம்ப நம்புறீங்கப்பா! மான்களை கலாய்க்கும் வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ