Dangerous Stunt Video:தற்போது, சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன, அவற்றில் இதுபோன்ற பைக் ஸ்டண்ட் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. ஆனால், ஒரு தாத்தா செய்யும் ஆபத்தான ஸ்டாண்ட் அனைவருக்கும் திகைப்பை ஏற்படுத்துகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படி ஒரு ஆபத்தான ஸ்டைல் ஸ்டண்டை நீங்கள் பார்த்திருக்க முடியாது... வயசானா என்ன? இன்னைக்கு இருக்க பசங்களுக்கெல்லாம் டஃப் ஃபைட் கொடுக்கும் தாத்தாவின் அட்ராசிட்டி வீடியோ இது...



சமூக ஊடகங்களில் (Social Media) பைக் ஸ்டண்ட் வீடியோக்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இருந்தாலும் அவற்றில் பெரும்பாலான வீடியோக்கள் துள்ளும் இளைஞர்கள் செய்த ஸ்டண்டாக இருக்கும். 


இளைஞர்கள் பைக்கில் ஸ்டண்ட் செய்து நடனமாடுவதைப் பார்த்திருக்கலாம்.  ஸ்டண்ட் செய்யும் போது பல இளைஞர்கள் காயம் அடைந்து விபத்துக்களில் பலியாவதையும் காணமுடிகிறது.


ALSO READ | Viral Video: என்ன ஒரு கம்பீர நடை; இதுவல்லவோ அசல் ‘பாயும் புலி’


ஆனால், சினிமா ஹீரோ போல பைக்கில் ஸ்டண்ட் செய்யும் தாத்தாவின் அட்ராசிட்டி வீடியோ வைரலாகிறது. இந்த வீடியோவை பார்த்தால், இன்றைய இளைஞர்களுக்கு சவால் விடும் அளவு ஸ்டண்ட் செய்யும் பெரியவர் ஆச்சரியபப்டுத்துகிறார்.


பைக்கில் செல்லும்போது கையை விட்டு ஜாலியாக ஸ்டைல் காட்டும் இந்த வீடியோவுக்கு ஏற்ற டிரெண்டிங்கான பாடல் ஒன்றும் பின்னணியில் ஒலிப்பது, வீடியோவின் சுவராசியத்தைக் கூட்டுகிறது.


பைக்கில் செல்லும் தாத்தா, கையை தூக்கிக் காண்பிப்பதும், சில நொடிகள், முன்னும் பின்னும் வளைந்து வித்தை காட்டுவதும் என கலக்குகிறார். ஆனால், இந்த ஆபத்தான ஸ்டண்ட் செய்வது இளைஞர்களோ அல்லது முதியவர்களோ யாராக இருந்தாலும் ஆபத்து தான்.


ALSO READ | Viral Video: ‘சிங்கத்தை சீண்டினால் என்ன ஆகும்’; சிங்கம் பாடம் புகட்டும் வைரல் வீடியோ!


ஆனால், ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல, என எண்ணும் எண்ணம் சூடான ரத்தம் ஓடும் இளைஞர்களுக்கு மட்டுமல்ல, வயோதிகத்தில் இருக்கும் தாத்தாவுக்கும் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.


உனக்கு வயசானாலும், அழகும் ஸ்டைலும் மட்டும் மாறல என்ற திரைப்பட வசனம் தான் நினைவுக்கு வருகிறது. 


இந்த வீடியோ ஜனவரி 12 அன்று yourenaturegram இன் Instagram பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. இந்த வீடியோ இதுவரை 10 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது.


ALSO READ | Spider Bite: சிறிய சிலந்தி தானே என எண்ண வேண்டாம்; ஒரு பெண்மணியின் பகீர் அனுபவம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR