Video: இணையத்தில் வைரலாகும் 96 Movie - Deleted Scene!
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உறுவாகி வெளிவந்த 96 திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உறுவாகி வெளிவந்த 96 திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!
இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்து பெரும் வெற்றிபெற்ற 96 திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சி யுடியூப்பில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. பள்ளிப் பருவ ஈர்ப்பை மையமாகக் கொண்டு, விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த 96 திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. குறிப்பாக ராம் மற்றும் ஜானு என்ற பெயர்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பெற்றுள்ளது.
இந்நிலையில் 96 படத்தில் நீக்கப்பட்ட காட்சி ஒன்றினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் விஜய் சேதுபதி, த்ரிஷாவின் பள்ளி பருவ நட்சந்திரங்களான ராம், ஜானுவின் நீக்கப்பட்ட காட்சிகள் காண்பிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக இப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட 'யமுனை ஆற்றிலே' பாடல் காட்சி கடந்த நவம்பர் 28-ஆம் நாள் படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. இந்த வீடியோவானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாவது நீக்கப்பட்ட காட்சியினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.