புது டெல்லி: டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சமூக ஊடகங்களில் வேடிக்கையான மீம்ஸ் மற்றும் வீடியோ எடிட்டிங் மூலமாக தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் பல வீடியோக்களை பகிரும் காட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை எட்டியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி (Aam Aadmi Party), பாஜக (Bharatiya Janata Party) மற்றும் காங்கிரஸ் (Congress) போன்ற கட்சிகள் பிப்ரவரி 8 ஆம் தேதி டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்புக்கு முன்னரே, சமூக ஊடகங்களில் ஒருவருக்கொருவர் புதிய மற்றும் தனித்துவமான வழிகளில் தாக்கி வருகின்றன. கார்ட்டூன்கள் மற்றும் மீம்ஸைத் தாண்டி, இப்போது மற்ற கட்சியினரை கேலி செய்யும் விதமாக வேடிக்கையான வீடியோக்களை எட்டியுள்ளது. இப்போது பாஜகவும் ஆம் ஆத்மி கட்சியும், யார் ஹீரோ என்று காட்ட வீடியோ பதிப்புகளை பகிர்ந்து ஒருவருக்கொருவர் குறிவைத்து தாக்கி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் பகிரப்பட்ட வீடியோவைப் பற்றி பேசுகையில், கீழே உள்ள காணொளியை டெல்லி பாரதிய ஜனதா கட்சி பகிர்ந்துள்ளார். அதில் ஹிந்தி மொழியில் எடுக்கப்பட்ட "முதல்வன்" படத்தின் ஹீரோவாக பாஜகவும், அந்த படத்தின் வில்லனாக அரவிந்த் கெஜ்ரிவாலையும் காட்சி எடிட்டிங் செய்யப்பட்டு உள்ளது. அண்மையில் டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்களுக்கு கெஜ்ரிவாலை பொறுப்பேற்க பாஜக முயற்சித்துள்ளது.


 



இதற்கு பதிலளிக்கும் விதமாக ஆம் ஆத்மி கட்சி தனது அதே படத்தை (நாயக்) வைத்து ஒரு வீடியோ பதிப்பை வெளியிட்டுள்ளது. 


 



மேலும் சில வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு......


 



 



 



 



உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.