ஹிட்லரை போல் செயல்படுகிறார் மோடி என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹோலி பண்டிகையின் போது குருகிராமின் போண்ட்ஸி பகுதியில் கிரிக்கெட் விளையாடிய 4 இஸ்லாமியர்களை அவர்களது வீட்டுக்குள் புகுந்து 30-க்கும் மேற்பட்டவர்கள் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலாக பரவியது. இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.


இந்நிலையில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோடி, ஆட்சியை பிடிக்க ஹிட்லர் வழியை பின்பற்றுகிறார். சிறுபான்மை மக்களை கொல்ல ஹிட்லரும் இதுபோன்றே குண்டர்களை வைத்து ஆட்சியை பிடித்தார். அதே வழியை மோடியும் பயன்படுத்த தொடங்கியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் இஸ்லாமியர்களை தாக்கியவர்கள் இந்துக்கள் இல்லை என்றும் அவர்கள் அரக்கர்கள் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளதாவது... ‘இந்து மத புத்தகங்களில் எங்காவது, இஸ்லாமியர்களை தண்டியுங்கள் என்ற வாசகம் உள்ளதா?’ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.



இந்த சம்பவத்துக்கு பாலிவுட் நடிகை புமி பெட்னேகரும் ட்விட்டரில் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.