டெல்லியில் 5 நட்சத்திர ஓட்டலுக்கு வெளியே துப்பாக்கியுடன் திரிந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.பி., மகனின் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த அக்டோபர் 14-ம் தேதி டெல்லியின் நட்சத்திர ஓட்டல் வெளியே ஒருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டும் வீடியோ வெளியாகி வைரலானது. சில விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் பிங்க் நிர கால்சட்டை அணிந்த அந்த நபரின் வலது கையில் துப்பாக்கியுடன் ஒரு இளம் பெண் மற்றும் ஆணிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். 


வாக்குவாதத்தில் ஈடுபடுக்கொண்டிருந்த அந்த நபரை ஓட்டல் பணியாட்கள் உள்ளிட்டோர் சமாதானப்படுத்துகின்றனர். இந்நிலையில் மிரட்டலில் ஈடுபட்டவர் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.பி., ராகேஷ் பாண்டேவின் மகன் ஆஷிஷ் பாண்டே எனத் தெரியவந்துள்ளது. தற்போது அவர் மீது ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.