“மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன” திரைப்படத்தின் Sneak Peek வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் துருவா, ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உறுவாகி வெளிவர காத்திருக்கும் திரைப்படம் “மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன”. இப்படத்தின் Sneak Peek வீடியோவினை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இயக்குனர் ராஹேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் ராதாரவி, ஜேடி சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்னன், மனோபாலா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அச்சு இசையமைத்துள்ளார்.


திருட்டு மற்றும் கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரை கதை அமைந்திருப்பது போல் படத்தின் காட்சிகள் தெரிவிக்கின்றது.


முன்னதகா கடந்த ஜூன் 23-ஆம் நாள் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. அனல் பறக்கும் வசனங்களுடன், மிரளவைக்கும் வகையில் இந்த ட்ரைலர் அமைந்துள்ளது. 


இந்நிலையில் இன்று இப்படத்தின் Sneak Peek வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!