பூனைக்குட்டிகளுக்கு மற்ற விலங்குகளை காட்டிலும் இயற்கையிலேயே அதிகளவில் உணர்திறன் மிகுந்து காணப்படுகிறது.  ஆனால் அவற்றிற்கும் மனிதர்களை போல காதல் உணர்வும் மிகுந்துள்ளது, அதன் துணியை சேர எவ்வளவு போராடுகிறது என்பதை இப்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று காண்பிக்கிறது.  உயரமான சுவற்றின் மீது அமர்ந்திருக்கும் அதன் துணையை, பூனைக்குட்டி ஒன்று நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அதனை கரம்பிடித்து கொள்கிறது.  மனிதர்கள் இதுபோன்ற காரியங்களை செய்வது வன்முறையை தூண்டிவிடும், அதுவே இதுபோன்ற விலங்குகள் செய்வது பலரும் ரசிக்கும்படியானதாக அமைந்து இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Viral Video: பாம்பு என்றால் படை தான் நடுங்கும்... நான் இல்லை; வீர மங்கையின் சாகசம்


இந்த அழகான வீடியோவானது ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.  அந்த வீடியோவில் கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கலந்த ஒரு பூனை சுவற்றின் மேலேயும், செந்நிறம் மற்றும் வெண்மை கலந்த ஒரு பூனையிலும் கீழ் தரையிலும் நிற்பதை காண முடிகிறது.  மேலே நின்றுகொண்டு இருக்கும் பூனைக்குட்டியை சேர துடிக்கும் மற்றொரு பூனைக்குட்டி சுவற்றில் கை, கால்களை வைத்து ஏற முயற்சி செய்கிறது.  ஆனால் அந்த பூனைக்குட்டியால் ஏறமுடியவில்லை, தனது துணை இன்னும் நமது அருகில் வரவில்லையே என்று மேலே நிற்கும் பூனைக்குட்டி ஏக்கத்தில் பார்த்துக்கொண்டே இருக்கிறது.  ஒருவழியாக அந்த பூனைக்குட்டி முயற்சி செய்து தனது காதலியை கரம் கோர்த்து விடுகிறது.


 



ஒருவழியாக வீடியோவின் இறுதியில் இரண்டு பூனைக்குட்டிகளும் ஒன்று சேர்ந்துவிடுகிறது.  இந்த காட்சியை இணையத்தில் பல்லாயிரக்கணக்கான இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர்.  மேலும் இந்த வீடியோவிற்கு ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளும் பலவிதமான கமெண்டுகளும் குவிந்து வருகிறது.


மேலும் படிக்க | சீண்டியவரின் அந்தரங்க உறுப்பை பதம் பார்த்த பாம்பு வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR