Viral Video In India: பேஸ்புக், X (முன்பு ட்விட்டர்), இன்ஸ்டாகிராம், யூ-ட்யூப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்கள் மக்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்தியா போன்ற பெரும் மக்கள்தொகை கொண்ட நாட்டில் இணைய வசதி என்பது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தகவல் தொழில்நுட்பத்தின் உச்ச பலன்கள் என்பது இந்தியாவில் அதன் வேர் வரை பரவியிருக்கிறது எனலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய கிராமங்களில் இருக்கும் சமானிய விவசாயத் தொழிலாளி கூட இணையத்தின் பயனால் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறார். அவர்களும் அதில் ரீல்ஸ் முதல் போட்டோக்கள் வரை அனைத்தையும் பதிவிட்டுகின்றனர், ஒரு சிலரோ மிகுந்த பாலோயர்ஸ்களையும் பெறுகிறார்கள். எனவே, நீங்கள் இந்தியாவின் ஒரு மூளையில் செய்யும் ஒரு செயல் நாடு முழுவதும் கொரோனாவை விட வேகமாக பரவிவிடும். 


அருவருப்பான வீடியோ


அந்த வகையில், மத்திய பிரதேசத்தில் உணவு தயாரித்து அதனை விற்பனை செய்யும் நபர் ஒருவர் செய்த அருவருக்கத்தக்க சம்பவத்தின் வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்டது. அந்த வீடியோ தற்போது இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வைரலான நிலையில், அந்த வீடியோவில் உள்ள நபரை போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது, இதனை உறுதிசெய்ய இயலவில்லை. போலீசார் கைது செய்யும் அளவிற்கு, அந்த நபர் அருவருப்பாக செய்த செயல் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக காணலாம். 


மேலும் படிக்க | எதையோ விழுங்கி அவதிப்படும் நாகம்..! வைரலாகும் வீடியோ..!


Momos என்றால் என்ன?


மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் நகரில் சாலையோர கடை நடத்தி வருபவர்கள் ராஜ்குமார் கோஸ்வாமி மற்றும் சச்சின் கோஸ்வாமி. சகோதரர்கள் என கூறப்படுகிறது. அவர்களின் கடையில் Momo என கூறப்படும் நொறுக்குத்தீனி விற்பனை செய்யப்படுகிறது. கொழுக்கட்டைப் போல் வெளியே மாவு இருக்க உள்ள காரத்தை வைத்து அவித்து செய்யப்படும் உணவுதான் Momo.



(கோப்பு புகைப்படம்)


இது திபத் நாட்டில் அறிமுகமானது என கூறப்படுகிறது. இருப்பினும், இந்தியா, நேபாளம், பூட்டான் ஆகிய தென்கிழக்காசிய நாடுகளில் மிகவும் பிரபலமான உணவாகவும் உள்ளது. சிறு குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை இந்த Momo-ஐ சுடச்சுட சாப்பிடுவதற்கு அதிகம் விருப்பப்படுவார்கள். அவர்களைதான் இந்த வீடியோ கவலை அடைய வைத்துள்ளது. 


வைரலாகி வரும் வீடியோ


அதில், ஒருவர் வெறும் உள்ளாடையை மட்டும் அணிந்தபடி சட்டியில் போடப்பட்டிருக்கும் மாவு, அதன் பதத்திற்கு வர காலால் மிதித்து மிதித்து மாவை சேர்க்கும் வீடியோதான் பார்ப்போரை கதிகலங்க வைத்துள்ளது. அந்த மாவு Momos-இன் வெளிப்புறத்தை செய்ய பயன்படுத்தப்படுவது எனவும் கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக உத்தர பிரதேசம் ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் கோஸ்வாமி, சச்சின் கோஸ்வாமி ஆகியோரை போலீசார் கைது செய்திருப்பதாக ஒரு X பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.