பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Frozen-2 திரைப்படத்தின் ட்ரைலர்!
![பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Frozen-2 திரைப்படத்தின் ட்ரைலர்! பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Frozen-2 திரைப்படத்தின் ட்ரைலர்!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2019/02/14/140542-forzen2.jpg?itok=2Jx8kahy)
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபிரோசன்(Frozen)-2 திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபிரோசன்(Frozen)-2 திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது!
வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டூடியோ தயாரிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஃப்ரோசன். ஆனா மற்றும் ஆனாவின் சகோதரி எல்சாவுக்கும் இடையே நடக்கும் பாச போராட்டத்தை கதைகளமாக கொண்டு உருவான திரைப்படம். அனிமேசன் பாத்திரங்களில் உருவாகி வெளியான இப்படம் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது.
ஜெனிபர் லீ மற்றும் கிரிஸ் பக் இயக்கி இருந்த இந்த படம் ஆஸ்கர் விருதையும் பெற்றது.
இப்படத்தின் வெற்றியினை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை படக்குழுவினர் உருவாக்க முன்வந்தனர். பின்னர் உருவாக்கம் குறித்த அறிவிப்பினையும் வெளியிட்டனர். இதனையடுத்து இந்த திரைப்படம் குறித்த அறிவிப்பு எப்போது வரும் என உலகளவில் ரசிகர்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களிம் ஆர்வத்தினை தூண்டியுள்ளனர்.