தேசிய அளவில் Twitter-ல் ட்ரெண்டாகும் DMK தலைவர் ஸ்டாலின்...!
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கப்படும் நிலையில், ட்விட்டரில் தேசிய அளவில் அவரது பெயர் ட்ரெண்டாகி முதலிடத்தில் உள்ளது..!
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கப்படும் நிலையில், ட்விட்டரில் தேசிய அளவில் அவரது பெயர் ட்ரெண்டாகி முதலிடத்தில் உள்ளது..!
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவினை அடுத்து, தற்போது திமுக-வின் தலைவருக்கான தேர்தல் இன்று நடத்தப்படவுள்ளது. அதற்க்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 26 ஆம் நாள் மாலை 4 மணிக்குள் செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இதனால் தற்போது திமுகவின் செயல் தலைவராக இருக்கும் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் திமுக மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேட்புமனு தாக்கல் செய்தார். அதேபோல திமுகவின் பொருளாளர் பதிவிக்கு துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி வேட்புமனுவை பெற்றுக்கொண்டார்.
இவர்கள் இருவரையும் எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், திமுக தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கின்றனர்.
இதை தொடர்ந்து, இந்திய அளவில் ட்விட்டரில் மு.க. ஸ்டாலின் ட்ரெண்டாகி முதலிடத்தில் உள்ளது..!