trending on  #TNCM_ReleasePerarivalan: 29 ஆண்டுகளை கடந்தும் இனியும் சிறைவாசம் தொடர வேண்டுமா? இனியும் தாமதம் வேண்டாம். உடனயாக பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய தமிழக முதல்வர் அவர்கள் ஆளுநரிடம் பேசி, அவர்களின் விடுதலையை உறுதி செய்ய வேண்டும் எனக் கோரிக்கையுடன் #TNCM_ReleasePerarivalan என்ற ஹேஸ்டேக் சமூக ஊடகத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை (Rajiv Gandhi Assassination) வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தொடக்கத்தில் தூக்கு தண்டனை விதிக்கப் பட்டு, பின்னர் பல்வேறு காலகட்டங்களில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் 1991 ஆம் ஆண்டு முதல் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 29 ஆண்டுகளாக சிறைகளில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை பல வருடங்களாக வைக்கப்பட்டு வருகிறது. 


7 தமிழர்களையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி தமிழக அமைச்சரவை நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது ஆனால் இந்த விவாகரத்தில் 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தமிழக ஆளுநர் புரோகித் (Banwarilal Purohit) முடிவெடுக்காமல் காலதாமதம் செய்து வருகிறார் என அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது.


ALSO READ | நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து விஜய் சேதுபதி ஆளுநருக்கு கோரிக்கை!


இந்தநிலையில், நேற்று பேரறிவாளன் (A. G. Perarivalan) விடுதலைத் தொடர்பான வழக்கை விசாரித்த  உச்ச நீதிமன்றம், "பேரறிவாளன் விடுதலை தொடர்பாக 2 ஆண்டுகளாக முடிவெடுக்காமல் இருப்பதா? என தன்னுடைய அதிருப்தியை பதிவு செய்தது. மேலும் இந்த வழக்கை நவம்பர் 23 விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. 


இதனையடுத்து ட்விட்டரில் #TNCM_ReleasePerarivalan என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங்காகி வருகிறது.