மனிதர்களை விட விலங்குகள் புத்திசாலி என்பதை பல சம்பவங்கள் நிரூபித்துள்ளன. ஆனால் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகும் ஒரு வீடியோ அது உண்மை என்பதை நிரூபிக்கிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரங்கு ஒன்று, முகக்கவசம் ஒன்றை எடுக்கிறது, அதை சரியாக அணிந்துகொள்கிறது. இதைக்காட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது. நெட்டிசன்கள் இந்த வீடியோவை பார்த்து மலைத்துப் போகின்றனர்.


உண்மையில், எந்தவொரு உயிரினமும் பிழைப்பதற்கு இயற்கையாகவே போராட வேண்டியுள்ளது. சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் இனம் தான் உயிர் வாழ முடியும். தன்னை மாற்றிக்கொள்ளாத மனம் கொண்ட இனத்தின் சந்ததிகள் அருகி, ஒரு கட்டத்தில் மறைந்துவிடுகிறது.  


மிகவும் ஆரோக்கியமாக வாழும் உயிரினங்கள் தங்கள் பண்புகளை அடுத்த தலைமுறையினருக்கு கற்பிக்கின்றனர்.


Also Read | Viral Music: காக்கிச்சட்டைக்குள் இசைக் கலைஞர்கள்! போலீசின் மற்றொரு முகம்…


இதற்கான சிறந்த உதாரணம் குரங்குகள் தானே? மனிதன் குரங்கில் இருந்து தோன்றியவன் என்ற கோட்பாடு உலகில் பரவலாக இருப்பதை நினைத்துப் பாருங்கள்.


மாறிய காலகட்டத்தின் இன்று, கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகம் அல்லாடிக் கொண்டிருக்கிறது.


'இயல்பான வாழ்க்கையை' நடத்த உலகம் போராடி வரும் நிலையில், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, தடுப்பூசி போட்டுக் கொள்வது போன்றவை அனைவரின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவும் மாறிவிட்டது. 


நமது கிரகத்தில் வசிக்கும் விலங்குகள் கூட முகக்கவசத்திற்கு பழக்கப்பட்டுவிட்டது என்பதும்,  அதை என்ன செய்வது, எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் புரிந்துக் கொண்டதை இந்த வைரல் வீடியோ உணர்த்துகிறது.



சமூக ஊடகத்தில் ரெக்ஸ் சாப்மேன்என்ற பயனர் பதிவேற்றிய இந்த குரங்கு-முகக்கவசம் வீடியோ அதற்கு ஒரு அருமையான உதாரணம். 27 வினாடி நீளமான இந்த வீடியோவில், ஒரு குரங்கு தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்தது, முகக்கவசம் ஒன்றைப் பார்த்ததும் அது நின்றுவிடுகிறது. தானே இயல்பாக, குரங்கு, அந்த கவசத்தை தனது முகத்தில் போட்டுக் கொண்டு  மீண்டும் தெருவில் ஓடுகிறது.


குரங்கு அதன் முழு முகத்தையும் மறைக்கும் வகையில் முகக்கவசம் அணிந்திருப்பது சிரிப்பை வரவழைக்கிறது. இந்த வீடியோவை பதிவு செய்தவர், இது 'லெஜண்ட்' குரங்கு என்று பதிவிட்டிருக்கிறார்.


Also Read | இளஞ்சிவப்பு டால்பினின் அற்புதமான தோற்றம்! இணையத்தில் வைரல்


வீடியோவின் கருத்துப் பிரிவில் ஸ்மைலிகளால் நிரம்பியுள்ளது. நெட்டிசன்கள் விலங்குகளின் புத்திசாலித்தனத்த்தை பார்த்த பிறகு அமைதியாக இருப்பார்களா என்ன?


உண்மையில் பெரும்பாலான மனிதர்களை விட முகக்கவசத்தை இந்த விலங்கு சரியாக அணிவதாக சிலர் பதில் போட்டிருக்கின்றானர்.  


இந்த வீடியோ இதுவரை 1.8 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது மற்றும் கிட்டத்தட்ட 41 ஆயிரம் லைக்குகள் வந்துள்ளன. முகக்கவசம் அணிந்த குரங்கு, பல மனிதர்களை விட புத்திசாலி' என்பதற்கு இதை விட வைரல் உதாரணம் வேண்டுமா?


Read Also | Super Mother Hero: 10 ஆப்கன் சிறுமிகளை மீட்ட 11 குழந்தைகளின் அமெரிக்க அன்னை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR