கொரோனா வைரஸின் இரண்டாவது அலை அச்சுறுத்தல் இன்னும் நாடு முழுவதும் உள்ளது. இந்த ஆபத்தான வைரஸால் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர். இதற்கிடையில், மியூகோமிகோசிஸ் (Mucormycosis) என்ற பூஞ்சை தொற்றுநோயும் அழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு, சிலர் கருப்பு பூஞ்சை நோய்க்கு இரையாகிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பூஞ்சை உடலின் ஒவ்வொரு பகுதியையும் பாதிக்கிறது. நுரையீரலை இதயம் மற்றும் மூளைக்கு இலக்காகக் கொண்ட கருப்பு பூஞ்சை (Black Fungus) மக்களுக்கு ஆபத்தானது என்பதை காட்டுகிறது. இருப்பினும், சுகாதார வல்லுநர்கள் கருப்பு பூஞ்சை பற்றி கூறுகையில், இந்த பூஞ்சை தொற்று தோலில் உள்ள காயங்கள் மூலம் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தும். இதனுடன், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களும், எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களும் கருப்பு பூஞ்சை பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்.


ALSO READ |  Horrible Fungus: கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை பாதித்தவரின் நிலை என்ன?


இதற்கிடையில், சமூக ஊடகங்களில் ஒரு போஸ்டர் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில் சிக்கன் சாப்பிடுவதன் மூலம் கருப்பு பூஞ்சை பரவுகிறது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இது பெரும் விவாதத்திக்கு உள்ளானது. 


ஆனால் சுகாதார நிபுணர்கள் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. சிக்கன் சாப்பிடுவதன் மூலம் கருப்பு பூஞ்சை பரவுகிறது என்பது ஒரு வதந்தி என்றும், சிக்கனுக்கும் கருப்பு பூஞ்சைக்கும் எந்த தொடர்பும் இல்லை. மாறாக, கருப்பு பூஞ்சை கொரோனா வைரஸ் போல வாய் மற்றும் மூக்கு வழியாகவும் பரவுகிறது.


ALSO READ |  இந்த பிரச்சினை உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று தாக்க வாய்ப்புகள் அதிகம்


வாய் மற்றும் மூக்கு வழியாக நுழைந்த பிறகு, இந்த பூஞ்சை மூளை, கண்கள் மற்றும் நுரையீரலை குறிவைக்கிறது. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, கோவிட் மற்றும் கருப்பு பூஞ்சை நோயாளிகள் நன்றாக வேகவைத்த சிக்கனை உட்கொள்ளலாம்.


இதனுடன், பத்திரிகை தகவல் பணியகம் அதாவது பிஐபி ஊடகமும் தனது ட்விட்டர் பக்கத்தில், "சிக்கனிலிருந்து கருப்பு பூஞ்சை பரவுவதாகப் போடப்பட்ட அந்த ட்வீட், பகிர்ந்து, அதில் “சிக்கன் மூலம் கருப்பு பூஞ்சை பரவுகிறது என்று கூறி சமூக ஊடகங்களில் வைரலாகி வரும், இந்த பதிவு உண்மை இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது" என PIB தெரிவித்துள்ளது. 


 



அந்த ட்வீட்டில் மேலும், "இந்த தொற்று சிக்கன் சாப்பிடுவது மூலம் மக்களுக்கு பரவுகிறது என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை." எனவும் PIB தனது பதில் விளக்கம் அளித்துள்ளது.


ALSO READ |  Black Fungus: இந்த எளிய டிப்ஸ் மூலம் உங்களை பாதுகாத்துக்கொள்ளலாம்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR