இந்தியா முழுவதும் இரண்டாம் அலை காரணமாகக் கடந்த சில வாரங்களாகவே வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கொரோனாவிலிருந்து (Coronavirus) மீண்டு வருபவர்களை கருப்பு பூஞ்சை (Black Fungus) என்ற புதிய தொற்று தாக்குவதாக செய்திகள் வெளியாகின. அதேசமயம் கருப்பு பூஞ்சை தொற்று நோயை விட அதிக ஆபத்தை உண்டாக்கும் வெள்ளை பூஞ்சை (White Fungus) தொற்றுநோய் பாதிக்கப்பட்ட நோயாளி கண்டறியப்பட்டனர். மியூக்கோர்மைகோசிஸ் (Mucormycosis) என்னும் கருப்பு பூஞ்சையை விட வெள்ளை பூஞ்சை தொற்று மிகவும் ஆபத்தானது.
இந்நிலையில் தற்போது அதைவிட மிக அதிக பாதிப்பை தரக்கூடிய மஞ்சள் பூஞ்சை (Yellow Fungus) தொற்றும் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் காஸியாபாத்தில் ஒரு நபருக்கு இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மஞ்சள் பூஞ்சை அறிகுறிகள்
மஞ்சள் பூஞ்சையின் அறிகுறிகள் சோம்பல், குறைந்த பசி, அல்லது பசியின்மை மற்றும் எடை இழப்பு ஆகும்.
சிலபேருக்கு, காயங்கள் மெதுவாக குணமாதல், காயங்களில் மஞ்சள் பூஞ்சை சீழ் கசிவு, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உறுப்பு செயலிழப்பு மற்றும் கண்பார்வை மங்குதல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.
மஞ்சள் பூஞ்சைக்கான காரணங்கள்
மஞ்சள் பூஞ்சை தொற்று முக்கியமாக மோசமான சுகாதாரத்தால் ஏற்படுகிறது. வீட்டைச் சுற்றியுள்ள இடத்தை சுத்தம் செய்து முடிந்தவரை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் பழைய உணவுகள் மற்றும் மலம் போன்றவற்றை விரைவில் அகற்ற வேண்டும். வீட்டின் ஈரப்பதமும் முக்கியமானது.
எனவே இது எல்லா நேரங்களிலும் அளவிடப்பட வேண்டும், ஏனெனில் அதிக ஈரப்பதம் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். சரியான ஈரப்பதம் அளவு 30% முதல் 40% வரை இருக்கும். குறிப்பிடத்தக்க வகையில், அதிக ஈரப்பதத்தைக் காட்டிலும் குறைந்த ஈரப்பதத்தைக் கையாள்வது எளிது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR