டிவி-யில் கார்ட்டூன் பார்த்து கதறி கதறி அழுத நாய்: கண்கலங்க வைக்கும் வைரல் வீடியோ
Dog Emotional Video: நாய் டிவி பார்க்குமா? பார்த்தாலும் அதற்கு புரியுமா? பார்த்து, புரிந்தால் அதற்காக அழுமா? இது அனைத்தும் நடந்ததை காண்பிக்கும் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது.
வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
நாய்கள் நன்றியுள்ள விலங்குகள். நாய்களின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அவ்வப்போது பகிரப்படுகின்றன. நாய்களின் நன்றியுணர்வும், மனிதர்களிடம், குறிப்பாக தனது முதலாளியிடம் அவை காட்டும் பாசமும் பார்ப்பதற்கு மிக நெகிழ்ச்சியாக இருக்கும். பல வித விலங்குகள் தொடர்பான கார்டூன் மற்றும் அனிமேடட் படங்கள் வருவதுண்டு. அவற்றில் ‘லயன் கிங்’ காலத்தால் அழியாத ஒரு கிளாசிக்காக உள்ளது. இது உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்துள்ள ஒரு படைப்பாக உள்ளது.
ரசிகர்களுக்கு பிரியமான கதாபாத்திரங்கள், சக்திவாய்ந்த கதைக்களம் மற்றும் இதயத் துடிப்பை இழுக்கும் உணர்ச்சிகரமான தருணங்கள் ஆகியவை இதை காலத்தால் அழியாத காவியமாக மாற்றியுள்ளன. திரைப்படத்தில் மறக்க முடியாத காட்சிகளில் ஒன்று முஃபாசாவின் மரணம் என்றால் அதை மறுக்க முடியாது. இது உணர்ச்சிகரமான ஒரு தருணமாக இருக்கும். இது அனைத்து வயது ரசிகர்கள் மீதும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க | சீண்டிய இளைஞர்களை வெச்சி செஞ்ச பெண்: பாராட்டும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ
இதன் தாக்கம் மனிதர்கள் மீது மட்டுமல்ல. விலங்குகள் மீதும் ஏற்பட்டிருக்கிறது. முஃபாசா இறக்கும் காட்சிக்கு வளர்ப்பு நாய் ஒன்று காட்டும் ரியாக்ஷனின் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. முஃபாசாவின் மரணத்தை பார்த்த நாய் மிகவும் வருத்தப்பட்டு, கண் கலங்கி, கதறி அழும் காட்சியை வீடியோவில் காண முடிகின்றது. திரையில் முஃபாஸாவின் உடலை கட்டிக்கொண்டு சிம்பா, "எழுந்திரு" என்று கூறும் காட்சியை பார்த்த நாயால் தனது உணர்ச்சிகளை அடக்கிக்கொள்ள முடியவில்லை. நாய் அழுவதை வீடியோவில் காணவும் கேட்கவும் முடிகிறது. நாய் டிவி முன் நின்று தொடர்ந்து அழுகிறது. தன் உணர்ச்சியை காண்பிக்க அவ்வப்போது குரைக்கிறது. நாயின் இந்த ரியாக்ஷன் ஏற்கனவே டிவி-யில் சோகமாக வரும் காட்சிக்கு மேலும் சோகத்தை சேர்த்தது.
‘தி லயன் கிங்’ படத்தை பார்த்துவிட்டு செல்ல நாய் அழும் வைரல் வீடியோவை இங்கே காணலாம்:
முஃபாசா இறக்கும் காட்சி திரைப்படத்தில் ஒரு முக்கிய தருணமாகும். இது ஒரு அன்பான கதாபாத்திரத்தின் இழப்பைக் குறிக்கிறது. மேலும் சிம்பா அடுத்த அரசனாகும் பயணத்திற்கு களம் அமைக்கிறது. இந்த காட்சிக்கு நாய் காட்டும் ரியாக்ஷனும் உணர்ச்சி மிகுதியால் அது பாடும் பாடும் காண்பவர்களை கண்கலங்க வைக்கிறது. நாயின் உணர்ச்சிகளை நம்மால் நன்றாக புரிந்துகொள்ள முடிகின்றது.
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் 'pet_lovers1802' என்ற பயனர் பகிர்ந்துள்ளார். அவர் இதற்கு, "நாய் திரைப்படத்தை நன்றாகப் புரிந்துகொண்டது" என்று தலைப்பிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு 39 மில்லியன் வியூஸ்களும் 2.6 மில்லியன் லைக்குகளும் கிடைத்துள்ளன. தொலைக்காட்சியில் வரும் காட்சியை பார்த்த நாயின் ரியாக்ஷன் இணையவாசிகளை அழ வைக்கிறது. இந்த வீடியோவுக்கு பல வித கமெண்டுகளும் வந்த வண்ணம் உள்ளன.
மேலும் படிக்க | 'ஹாய்.. என் கூட பேசுவியா?’: பூச்சியுடன் பேசும் குழந்தை.. வைரலாகும் செம கியூட் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ