நாம் எந்த செயல்களை செய்கிறோமோ, அதைப்போலவே நம்முடைய வளர்ப்பு பிராணிகளும் செய்யும்.  அதில் நாம் செல்லப்பிராணியாக வளர்க்கும் நாயை பற்றி சொல்லவே வேண்டாம், நாய்கள் நன்றியுள்ள பிராணிகள் என்று காலம் காலமாக கூறப்பட்டு வருகிறது.  அவை நன்றியுள்ளவை மட்டுமின்றி நமக்கு ஒரு சிறந்த நண்பன் போல இருக்கின்றது, அவை சில சமயங்களில் நாம் செய்வதை அப்படியே பிரதிபலிக்கவும் செய்கிறது.  அப்படி தான் இங்கு வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் பாக்சிங் பேக்கில் ஒருவர் பன்ச் செய்து பழகும்போது அவருடன் நாயும் சேர்ந்து பன்ச் செய்ய முயற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வீடியோவானது டிவிட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது, அந்த வீடியோவில் பாக்சிங் பயிற்சி பெறுபவர்கள் பன்ச் செய்து பழக ஒரு அறையில் ஒரு பாக்சிங் பேக் பொருத்தப்பட்டு இருக்கிறது.  அந்த பேக்கில் பலரும் பன்ச் செய்வதை பார்த்த நாய்க்கு தனக்கும் அதுபோன்று செய்யவேண்டும் என்று ஆசை வந்திருக்கிறது போல.  படத்தில் ஹீரோக்கள் பறந்து பறந்து சண்டை போடுவது போல அந்த நாய் பறந்து பறந்து அந்த பாக்சிங் பேக்கை உதைக்கிறது.  முதலில் சரியாக பன்ச் பண்ண தெரியாமல் ஏடாகூடமாக குதிக்கும் நாய், அங்கு நிற்கும் ஒருவர் காலால் உதைத்து காட்டிய பிறகு அந்த நாய் அழகாக அந்த பாக்சிங் பேக்கில் பன்ச் செய்கிறது.


 



மேலும் படிக்க | மனைவியின் ஓவர் பாசம், சிக்கி சின்னாபின்னமான கணவன்: வைரல் வீடியோ


இணையத்தில் ஆகஸ்ட்-7ம் தேதி பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோவை இதுவரை ஐம்பத்தி ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர்.  இதுவரை இந்த வீடியோவிற்கு இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட லைக்குகளும், பல கமெண்டுகளும் குவிந்து வருகின்றது.


மேலும் படிக்க | 'ஆரம்பமே இப்படியா?' சொதப்பிய மணமகன், கடுப்பான மணமகள்: வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ