Dog Video: கற்கால தோன்றி இன்று வரை மனிதனுக்கு மிகவும் பிடித்த விலங்கு என்றால் அது நாய்தான். மனிதர்களுடன் நாய்கள் மிகவும் நெருக்கமாக பழக்ககூடியவை. கீழ்படிதல், நன்றி, உணர்ச்சி என நாய்களின் குணங்கள் மிகவும் அழகு. நீங்கள் ஏதாவது ஒரு பொருளை தூக்கி போட்டால், உடனே நாய் ஓடி சென்று, அந்த பொருளை எடுத்து கொண்டு உங்களிடம் சேர்க்கும். இப்படி சில விசியங்களை நாய்கள் செய்வதுண்டு. தற்போது ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதில் அந்த நாய் செய்யும் செயல் பார்த்து அனைவரும் ஆச்சரியமடைகிறார்கள். வீடோ, அடக்குமாடி குடியிருப்போ அல்லது அலுவலகமோ.. இங்கெல்லாம் "கேட்டை திறக்கும்" காவலர் வேலையை மனிதர்கள் செய்வதை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். ஆனால் இங்கு காவலர் வேலையை ஒரு நாய் செய்வதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால், ஒரு நாய் காவலராக பணிபுரியும் வீடியோ (Dog Video) குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.


மனிதர்களால் மட்டுமே காவலர் பணியை செய்ய முடியும் என்று நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் விலங்குகளையும் காவலர்களாகப் பயன்படுத்தலாம் என்பதை இந்த வீடியோ மூலம் நாம் அறிந்துக்கொள்ளலாம். வீட்டின் "கேட் அருகில்" செக்யூரிட்டியின் வேலை பார்ப்பது என்பது மிகவும் கடினம், ஏனென்றால் அவர்கள் வருபவர்களையும் போகிறவர்களையும் கண்காணிக்க வேண்டும். அடிக்கடி கதவுகளைத் திறந்து மூட வேண்டும். இப்படி பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். இதையெல்லாம் ஒரு நாயால் கூட செய்ய முடியும் என்று சொன்னால், நீங்கள் நிச்சயமாக ஆச்சரியப்படுவீர்கள்.


மேலும் படிக்க: Wise Donkey: நான் வித்தியாசமானவன்: கற்பூர புத்தி கொண்ட புத்திசாலி கழுதை


சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், வீட்டைக் காக்கும் காவலாளியாக நாய் ஒன்று பணிபுரிகிறது. வீட்டுக்கு வருபவர்களையும் போகிறவர்களையும் கண்காணிக்கிறது. யாராவது உள்ளே வந்தால், அவர்களைத் தடுத்து, அவர்களைப் பற்றிய விவரங்களை அங்கு இருக்கும் பதிவேட்டில் நிரப்ப சொல்கிறது. நீங்களே வீடியோவை பாருங்கள்!


 



அந்த வீடியோவில், வீட்டுக்குள் நுழைய கார் ஓன்று வருகிறது. காரைப் பார்த்ததும் நாயும் கதவைத் திறந்து அடையாளம் காண முயல்கிறது. காரை உள்ளே நுழைய விடாமல், அந்த நாய் சத்தம் போடுகிறது. உடனே, அங்கிருக்கும் பதிவேட்டை எடுத்து சென்று, காரில் உள்ளவரிடம் கொடுக்கிறது. அதில் விவரங்கள் நிரப்பட்டவுடன், கார் உள்ளே செல்ல அனுமதிக்கிறது. இந்த வீடியோவின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் பார்த்தீர்கள் என்றால், நாய்க்கும் காவலாளியாக உடை அணிவிக்கப்பட்டு உள்ளது.


இதுவரை இந்த வீடியோ 2 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. animalogy_ig என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு உள்ளது.


மேலும் படிக்க: Viral Video: நாகப்பாம்பை கடித்து குதறும் கீரி; மனம் பதற வைக்கும் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR