விலங்குகளிடம் இருக்கும் சேட்டை மற்றும் குறும்புத்தனம் ஒரு சில நேரங்களில் மனிதர்களைக் காட்டிலும் வித்தியாசமாகவும், வாஞ்சையாகவும் இருக்கும். காமெடி கலாட்டாக்களுக்கு அவற்றிடம் பஞ்சமே இருக்காது. வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணி நாய் என்றால், அவற்றின் கோபத்துக்கும், கொஞ்சும் அழகுக்கும் எல்லையேதும் இருக்காது. அந்தளவுக்கு அவற்றின் ஒவ்வொரு செயலும் ரசிக்க வைக்கும். குதூகலப்படுத்தும். இப்படியான வீடியோக்கள் எப்போதாவது ஒருமுறை தான் இணையத்தில் வைரலாகும். அந்த வீடியோக்களும் இணையவாசிகளை வெகுவாக கவர்ந்து டிரெண்டிங்கில் இடம்பிடித்துவிடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ‘ப்ப்ப்பா....பாம்பு’: இணையத்தை பற்ற வைக்கும் பாம்புகளின் காதல், வீடியோ வைரல்


அந்தவகையில், நாய் ஒன்று கோபித்துக் கொண்டு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு இருக்கும் வீடியோ இப்போது இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. உரிமையாளர் அல்லது யாரோ ஒருவரிடம் அந்த நாய் திட்டு வாங்கிவிட்டது போல் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து தனக்கு ஏற்பட்ட கட்டுப்படுத்த முடியாத கோபத்தால், அந்த இடத்தை விட்டு விலகிச் சென்று கோபத்துடன் ஒளிந்து கொள்ள முடிவெடுத்துள்ளது. அதன்படி, அந்த நாய்க்குட்டியானது மரத்தின் பின்னால் சென்று ஒளிந்து கொள்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், மரத்தின் பின்னால் நாய் இருப்பது அப்படியே வெட்டவெளிச்சமாக தெரிகிறது.



நாயின் முகம் மட்டுமே மறைந்திருக்கிறது. ஆனால், அந்த நாய், தான் எங்கோ சென்று கண்டுபிடிக்க முடியாத இடத்தில் ஒளிந்து கொண்டதுபோல் நினைந்துக் கொண்டிருக்கிறது. தொலைவில் இருந்து பார்த்தால் கூட நாய் மரத்தின் பின்னால் ஒளிந்து இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. இந்த வீடியோவைப் பார்த்து வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள், செல்லப் பிராணிகளின் கோபம் கூட அழகுதான் என கமெண்ட் அடித்து வருகின்றனர். டிவிட்டரில் பதிவிடப்பட்ட கொஞ்ச நேரத்தில் மட்டும் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். 


மேலும் படிக்க | Viral News: தன்னை கடித்த பாம்பை கடித்து குதறிய 2 வயது சிறுமி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ