‘ப்ப்ப்பா....பாம்பு’: இணையத்தை பற்ற வைக்கும் பாம்புகளின் காதல், வீடியோ வைரல்

Snake Love Video: இரு பாம்புகள் காதல் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன் எப்பொழுதும் இப்படி ஒரு வீடியோவை பார்த்திருக்க முடியாது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 17, 2022, 06:48 PM IST
  • பாம்புகள் காதலித்தால் எப்படி இருக்கும்?
  • பாம்புகளின் அன்பின் வெளிப்பாடு எப்படி இருக்கும்?
  • இது பற்றிய ஒரு வீடியோ வரலாகி வருகிறது.
‘ப்ப்ப்பா....பாம்பு’: இணையத்தை பற்ற வைக்கும் பாம்புகளின் காதல், வீடியோ வைரல் title=

பாம்பு வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் நாம் பல வித வீடியோக்களை தினமும் காண்கிறோம். இதில் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் அதிகமாக காணப்படுகின்றன. இவை அனைத்தும் வெளியிடப்பட்ட உடனேயே வைரல் ஆகி விடுகின்றன. அதுவும் பாம்புகளின் வீடியோக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். பாம்புகளின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. பாம்புகளின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. பாம்புகளின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு.

சாதாரணமான நெருங்க முடியாத பாம்புகளை மிக அருகில் பார்க்க இந்த சமூக ஊடக வீடியோக்கள் உதவுகின்றன. பாம்புகள் தொடர்பான பல வித வித்தியாசமான நிகழ்வுகளை நாம் இவற்றில் காண்கிறோம். நம்மால் கற்பனை கூட செய்ய முடியாத பலவற்றை இங்கே காணலாம். இதற்கு முன் எப்பொழுதும் பார்த்திராத ஒரு பாம்பு வீடியோ தற்போது இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இரு பாம்புகள் காதல் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் இதை லைக் செய்துள்ளனர்.

மேலும் படிக்க | பாம்பு நடக்குமா? இணையத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்திய வைரல் வீடியோ

இப்படி ஒரு காட்சியை கண்டிருக்க முடியாது

தற்போது வெளிவந்துள்ள இந்த பாம்புகளின் வீடியோ, ஒரு பண்ணை வீட்டில் எடுக்கப்பட்டுள்ளது போல தோன்றுகிறது. இதில், சுமார் பத்து அடி நீளமுள்ள இரு பாம்புகள் மிக நெருக்கமாக இருப்பதைக் காண முடிகின்றது. இரு பாம்புகளும் பின்னிப்பிணைந்து காணப்படுகின்றன. ஒன்றன் உடலால் மற்றொன்றின் உடலை போர்த்தியுள்ளது போல் இந்த பாம்புகள் காணப்படுகின்றன. 

இரு பாம்புகளுக்கும் இடையிலான காதல் இந்த வீடியோவில் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. சில நேரங்களில் தலையோடு தலையை இணைத்தும், உடலோடு உடலை இணைத்தும் இவை காதல் செய்கின்றன. வீடியோவில் இந்த காட்சி காண்பதற்கு மிக அழகாக தெரிகின்றது. 

பாம்புகளின் அளவுக்கடங்கா அன்பின் வீடியோவை இங்கே காணலாம்:

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SNAKE WORLD (@snake._.world)

பாம்புகளின் காதல் பற்றிய இந்த விடியோ வீடியோ சமூக ஊடகங்களின் பல்வேறு தளங்களில் ஆர்வத்துடன் பார்க்கப்பட்டு வருகிறது. இது snake._.world என்ற பெயரில் இன்ஸ்டாகிராமிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | கல்யாணத்த வெச்சிகிட்டு இப்படியா செய்யறது? புல்லெட்டில் பறந்த மணமகள், வைரல் விடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News