நாய்கள் நன்றியுள்ள பிராணிகள் என்பதை உண்மையாகும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.  எஜமானர்களை கடிக்க வந்த பாம்பை நாய்கள் தாக்கிய சம்பவம், கயவர்களை பிடிக்க உதவிய சம்பவம் என அடுக்கடுக்காக பல்வேறு நிகழ்வுகள் நாய்களின் நன்றியுணர்வை உலகிற்கு வெளிக்காட்டி வருகிறது.  அதேபோல தன்னை பாதுகாத்து வளர்த்த எஜமானரின் குழந்தையை நாய் பராமரிக்கும் வீடியோ தான் இணையத்தில் பல இணையவாசிகளின் இதயங்களின் ஈர்த்து இருக்கிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஸ்பைடர்மேனாக மாறிய பூனை! வைரல் வீடியோ! 


பொதுவாக பெரியவர்களை விட குழந்தைகள் எளிதில் வளர்ப்பு பிராணிகளிடம் ஒட்டிக்கொள்கின்றன.  இதனால் நாய்களும், குழந்தைகளும் நண்பர்களாகி விடுகின்றனர்.  தற்போது வைரலாகி வரும் வீடியோ ட்விட்டரில் 'லாஃப்  4 ஆல்' என்கிற கணக்கில் பதிவிடப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவுடன் 'தேர் யூ கோ பட்டி, லெட்ஸ் கெட் யூ கவர்ட் அப்' என்ற கேப்ஷனும் பதிவிடப்பட்டுள்ளது.  அந்த வைரல் வீடியோவில், பிறந்து சில மாதங்களே ஆனா குழந்தை ஒன்று அதற்கான பெட்டில் அழகாக உடை அணிந்து உறங்கிக்கொண்டு இருக்கின்றது.  அப்போது அதன் மீது போர்த்தப்பட்டு இருந்த போர்வை நழுவி கீழே விழ, அதனை  உடனே தன் வாயால் எடுத்து குழ்நதையின் மீது போர்த்துகின்றது.  அப்போது அந்த குழந்தை உறக்கத்தில் நெளிந்துகொண்டு இருக்கின்றது.


 



இந்த காட்சி பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றது, மார்ச்-9ம் தேதி பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை இணையத்தில் இதுவரை எண்பத்தி ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.  நாயின் செயலை பலரும் பாராட்டியும், குழந்தையின் அழகை வர்ணித்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்.  பலரின் கவனத்தை ஈர்த்த இந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது, மேலும் இதனை பலரும் பகிர்ந்து வைரலாகி வருகின்றனர்.


மேலும் படிக்க | சேற்றுக் குளத்தில் குத்தாட்டம் போட்ட கோவில் யானை! வைரலாகும் வீடியோ! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR