துபாயில் பாஸ்போர்ட் இல்லாமல் சிக்கிய வாலிபருக்கு உதவிய காவல்துறை!
துபாயில் பணிக்கு சென்ற வாலிபரின் பாஸ்போர்ட் அவரிடமிருந்து பறிக்கப்பட்டு, வங்கிக் கடனுக்கு எதிராக பிணையமாக வைக்கப்படுவது குறித்து பாதிக்கப்பட்ட வாலிபர் விடுத்த வேண்டுகோள் ட்விட்டரில் வைரலாகியுள்ளது
துபாயில் பணிக்கு சென்ற வாலிபரின் பாஸ்போர்ட் அவரிடமிருந்து பறிக்கப்பட்டு, வங்கிக் கடனுக்கு எதிராக பிணையமாக வைக்கப்படுவது குறித்து பாதிக்கப்பட்ட வாலிபர் விடுத்த வேண்டுகோள் ட்விட்டரில் வைரலாகியுள்ளது
ஜாஹிர் சர்க்கார் துபாய் காவல்துறைக்கு அளித்த ட்விட்டர் பதிவுகளின் படி, அவர் ஒரு எகிப்தியரால் துபாய்க்கு அழைத்து வரப்பட்டதாகவும், அவரது விசாவை இரண்டு வருட காலத்திற்கு முத்திரை குத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் விசா முத்திரையைப் பெற்ற பிறகு அந்த நபர் ஜாகிருக்கு கடன் வாங்கினார் எனவும், ஆனால் ஜாகிருக்கு அந்த பணத்தை அளிக்காமல் தான் எடுத்துக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, எகிப்தியர் ஜாகிரின் பாஸ்போர்ட்டை வங்கி கடனுக்கு எதிரான ஒரு இணை / உத்தரவாதமாக வைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தனது ஐக்கிய அரபு எமிரேட் விசா ஒரு வருடத்திற்கு முன்னர் காலாவதியானது என்றும், அவர் சிக்கிய சூழ்நிலை காரணமாக அவர் பெரும் சிக்கலில் இருப்பதாகவும் ஜாகிர் துபாய் போலீசாரிடம் தனது ட்விட்டர் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து., ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்தை அணுகி மனிதனின் வேண்டுகோளுக்கு துபாய் காவல்துறை பதிலளித்தது.
சர்காரிடம் அவரது பிரச்சினை குறித்து விரிவான விளக்கம் அளிக்கவும், அவரது பாஸ்போர்ட் தனது முதலாளியிடம் வைத்திருக்கிறதா என்ற உண்மையை உறுதிப்படுத்தவும், அத்தகைய வழக்கில் அவர் புகார் அளிக்க முடியுமா என்றும் அமைச்சகம் கேட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து தங்களை அணுகியதற்காக ஜாகிர் சர்க்காருக்கும் துபாய் காவல்துறை நன்றி தெரிவித்துள்ளது. இந்த ட்விட்டர் பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.