UAE: வெப்பத்தை சமாளிக்க துபாயில் போலி மழை! Fake Rain என்றால் என்ன?
துபாயில் உருவாக்கப்பட்ட போலி மழையின் வீடியோவை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேசிய வானிலை ஆய்வு மையம் பகிர்ந்துள்ளது.
துபாயில் மழை பெய்தது… இது சாதாரணமான விஷயம் தானே? இதில் என்ன இருக்கிறது என்ற கேளி எழுகிறதா? இது தானாக வந்த மழையில்லை, உருவாக்கப்பட்ட போலி மழை… இந்த போலி மழையின் வீடியோவை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேசிய வானிலை ஆய்வு மையம் பகிர்ந்துள்ளது.
துபாயில் கோடைகாலம் மிகவும் கடுமையாக இருக்கும். ஒரு கட்டத்தில் அங்கு வெப்பநிலை 50C ஐ தாண்டியது. வெப்பத்தைத் தணிக்க, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய வானிலை மையம் எடுத்த முடிவு தான் போலி மழை. போலி மழை ஏற்படுத்திய நீர் துபாயின் தெருக்களிலும், சந்துகளிலும், வீதிகளிலும் ஆறாய் பாயந்தது, வெப்பத்தைக் குறைத்தது.
மேக விதைப்பு எனப்படும் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த மழை உருவாக்கப்பட்டதாக டெய்லி மெயில் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. புதுமையான தொழில்நுட்பம் மேகங்களில் மின்சார அதிர்ச்சியை ஏற்படுத்தி அதன் மூலம் மழையை வரவைக்கிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய வானிலை மையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலும் மழை பெய்யும் வீடியோ பகிரப்பட்டது. கார்கள் அணிவகுத்துச் செல்லும் வீதிகளில் மழை பொழிவதை அந்த வீடியோ காட்டுகிறது.
மழை பொய்க்கும் சமயங்களில் மேக விதைப்பு (Cloud seeding) முறையில் செயற்கையாக மழையை உருவாக்குவதுதான் செயற்கை மழையாகும். பூமியில் இருக்கும் நீர் ஆவியாகி மேலே நோக்கிச் செல்லும் போது குளிர்ந்து மேகமாக மாறுகிறது.
குறிப்பிட்ட பருவ காலங்களில் ஏற்படும் குளிர்ந்த காற்றின் மூலம் மேகங்களில் உள்ள நீர் மூலக்கூறுகள், நீர்த்திவலைகளாக மாறி மழை பொழிகிறது. இந்த நீர்க்கூறுகள் அதிக குளிர்ச்சியடைந்தால், மேகத்தில் உள்ள ஈரப்பதம் நீராக மாறாது. அப்போது மேகங்கள் இருந்தும் மழை பெய்யாமல் சென்றுவிடும்.
அப்போது, சிறிய விமானம் அல்லது ட்ரோன்கள் மூலம் பொட்டாசியம் அயோடைடு, சில்வர் அயோடைடு, கார்பன் டை ஆக்சைடு போன்றாவை மேகங்களின் மீது தூவப்படும். இவை ஈரப்பதத்தைச் சரி செய்து மழையைத் தருவிக்கும்.
40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த முறையை பயன்படுத்தி செயற்கையாக மழை பெய்விக்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் வீதிகளில் இந்தத் தொழில்நுட்பம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவிலும் மழை பொய்க்கும் காலத்தில் விவசாயத்திற்காக செயற்கை மழை பெய்விக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Also Read | மோப்பம் பிடிக்கும் திறனில் நாயுடன் போட்டிபோடும் வெட்டுக்கிளி! ராணுவத்தில் இணையுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR