மலையாள நடிகர் துல்கர் சல்மான், தனது சமீபத்திய திரைப்படத்தில் தமிழர்களை அவமதித்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மலையாள திரையுலகின் ஸ்டார் அந்தஸ்த்து நடிகர்., தனது சமீபத்திய திரைப்படமான ‘வரனே அவாஷ்யமுண்டில்’ திரைப்படத்தில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இணையவாசிகள் துல்கரின் குடும்பத்தாரையும் அவரையும் இணையத்தில் வாட்டியெடுக்க துவங்கினர். இந்நிலையில் தற்போது துல்கர் சல்மான் தங்கள் படத்தில் வந்த காட்சிக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.


இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு சிறிய காட்சி தான் தற்போது ஒரு பெரிய சர்ச்சையைத் தூண்டியுள்ளது. மேலும் இந்த காட்சி தமிழ் மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக பட தயாரிப்பாளர்கள் மீது குற்றம் சாட்டினர். இந்நிலையில் தற்போது இந்த காட்சிக்கு விளக்கம் அளித்த துல்கர், 'பிரபாகரன்' குறிப்பில் தனது கருத்தை தெளிவுபடுத்துவதற்காக அந்த குறிப்பை இணைத்துள்ளார். இதுதொடர்பான விளக்கத்தில் அவர் இது 'வேண்டுமென்றே செய்யப்படவில்லை', தவறுதலாக நடந்த செயலுக்கு தனது குடும்பத்தார் மற்றும் மூதாதையரை காயப்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.


துல்கரின் அறிக்கை., "வரணே அவஷ்யமுண்ட்-ல் உள்ள பிரபாகரன் நகைச்சுவை தமிழ் மக்களை அவமதிப்பதாக நிறைய பேர் என் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். இது வேண்டுமென்றே செய்யப்படவில்லை. இந்த நகைச்சுவை ஒரு பழைய மலையாள திரைப்படமான பட்டனா பிரவேசம் பற்றிய குறிப்பு மற்றும் கேரளாவில் ஒரு பொதுவான நினைவு. இது கேரளாவிலும் ஒரு பொதுவான பெயராகும், எனவே படத்தின் ஆரம்பத்தில் எங்கள் மறுப்பு குறிப்பிடுவதைப் போல இது வாழ்ந்த அல்லது இறந்த எந்தவொரு நபரிடமும் இயக்கப்படவில்லை. எதிர்வினையாற்றும் பெரும்பாலானவர்கள் படம் பார்க்காமல் அவ்வாறு செய்து வெறுப்பை பரப்ப முயற்சிக்கின்றனர். என்னையும் என் இயக்குனர் அனூப்பையும் வெறுக்க வைப்பதற்கான முயற்சியாக இது அமைந்துவிடக்கூடாது. மேலும் கோபம் இருக்கும் பட்சத்தில் அதை எங்களுடன் முடித்துவிடுங்கள், எங்கள் குடும்பங்களை தாழ்த்த வேண்டாம்.



புண்படுத்தப்பட்டதாக உணர்ந்த நல்ல மற்றும் தயவான தமிழ் ஈழ மக்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது படங்கள் மூலமாகவோ அல்லது என் சொற்களின் மூலமாகவோ யாரையும் புண்படுத்த நான் ஒருபோதும் விரும்பவில்லை. இது உண்மையிலேயே தவறான புரிதல்" என குறிப்பிட்டுள்ளார்.



வரணே அவஷ்யமுண்ட் பற்றி... பிப்ரவரி 7, 2020 அன்று வெளியான இப்படம், பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் நடித்த அய்யபனம் கோஷியம் திரைப்படத்திற்கு கடுமையான போட்டியை கொடுத்தது. துல்கர் சல்மான், ஷோபனா, கல்யாணி பிரியதர்ஷன், மற்றும் சுரேஷ் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வரணே அவஷ்யமுண்ட், அன்பைக் கண்டுபிடிக்கும் நான்கு நபர்களின் மனதைக் கவரும் கதையை விவரிக்கிறது. 


இந்தத் திரைப்படத்தில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டிக் காட்சிப்படுத்தியது படக்குழு. இந்த காமெடிக் காட்சிகளை வைத்து இணையத்தில் தமிழ்ப் பயனர்கள் பலரும் 'வரணே அவஷ்யமுண்ட்' படக்குழுவினரைக் கடுமையாகத் திட்டத் தொடங்கினார்கள்.



அனூப் சத்யன் இயக்கத்தில் 14 வருட இடைவெளிக்கு பிறகு வெற்றி ஜோடி சுரேஷ் கோபி மற்றும் ஷோபனா திரும்பியதைக் குறிக்கும் இத்திரைப்படம் துல்கரின் முதல் தயாரிப்பு ஆகும்.