இன்று நாங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகும் கதை மிகவும் அதிர்ச்சியளிக்க கூடியதாக இருக்கலாம், ஆம் கிளி ஒன்று திருட்டு வழக்கு சம்பந்தமாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருட்டு வழக்கில் கிளியின் குற்றம் என்னவென்றால், திருட்டு நடந்த நேரத்தில் கிளி அதன் உரிமையாளரின் தோளில் இருந்தது என்பது தான். திருட்டு குற்றச்சாட்டின் போது கிளியின் உரிமையாளர் கிளியை தனது தோளில் வைத்திருந்ததால் கிளியின் உரிமையாளருடன் சேர்த்து கிளியையும் நெதர்லாந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


இந்த விஷயத்தை படிக்க ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் இது தான் உண்மை. டச்சு போலீசாரின் இந்த செயல் நெதர்லாந்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இன்ஸ்டாகிராமில், Politie Utrecht Centrum என்ற கணக்கு இச்சம்பவம் தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். 



இது டச்சு காவல்துறையின் அதிகாரப்பூர்வ கணக்கு ஆகும். கிளியின் படத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது, ​​இது ஒரு வேடிக்கையான தொனியில் விவரிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது., 'நாங்கள் சமீபத்தில் ஒரு கடை திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவரை கைது செய்துள்ளோம். குற்றம் சாட்டப்பட்டவரின் தோளில் சிறகு கொண்ட சாட்சி ஒன்றும் காணப்பட்டது " என குறிப்பிடப்பட்டுள்ளது.


படத்தில், கிளி சிறைக்குள் உட்கார்ந்து இருக்க, அதற்கு ஒரு ரொட்டி மற்றும் தண்ணீரை காவல்துறை வைத்திருப்பது இன்ஸ்டா பயனர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த படம் சமூக ஊடகங்களில் பெருகிய முறையில் வைரலாகி வருகிறது. இதை பலர் ஒரு வேடிக்கையான சம்பவமாக பகிர்ந்து கொள்ள, சிலர் டச்சு போலீஸை குறிவைத்து விமர்சிக்கும் வகையில் தங்கள் கருத்துகளை பகிர்ந்துக்கொண்டனர். இதனுடன், கிளியை விரைவில் விடுவிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.