சமூக ஊடகங்களில் தினம் தோறும் விலங்குகள், பறவைகளின் ஏராளமான வீடியோக்கள் பகிரப்படுகின்றன.  ஆனால் அவற்றின் சில பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகிறது. இருப்பினும், சில நேரங்களில் சில வீடியோக்கள் மக்களை ஆச்சரியத்திலும் வியப்பிலும் ஆழ்த்தி விடும். அவை மிக அரிதாகவே காணப்படுகின்றன. அது போன்ற ஒரு வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுவரை பார்த்திராத வகையில் கழுகுகளின் காதல் ஜோடி ஒன்று, வானத்தில் நடனமாடும் வீடியோ. நடுவானில் ஒரு காதல் நடனம் என்ற இந்த  வீடியோவை பெரிய அளவில் வைரலாகியுள்ளது.


அந்த வீடியோ வெளியான சில நொடிகளில், ஒரு ஜோடி கழுகுகள் பூமியில் இருந்து சற்று மேலே பறப்பதைக் காணலாம். வீடியோவின் தொடக்கத்தில், எல்லாம் சாதாரணமாகத் தெரிந்தாலும்,  இரு கழுகுகளும் வானத்தின் உயரத்தில் பறக்கத் தொடங்கும் போது, அந்த காட்சி மிகவும் அற்புதமாக உள்ளது. வானத்தின் உயரத்தை எட்டியவுடன் ஜோடி கழுகுகள் ஒன்றையொன்று நெருங்கி வந்து கால் நகங்களால் ஒன்றை ஒன்று பற்றிக்கொள்வதைக் காணலாம்.


மேலும் படிக்க | Snake Vs Rabbit: தன்னை சீண்டிய முயலை பந்தாடிய பாம்பு - வைரல் வீடியோ


இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களும் மிகவும் ஆர்வமாக கமெண்ட் செய்து வருகின்றனர். பல பயனர்கள் இதை அற்புதம் என்று வர்ணித்துள்ளனர், பலர் இந்த வீடியோ காதல் இல்லை ஊடல் எனக் கூறியுள்ளனர். ஒரு பயனர் இதை இரு கழுகுகளுக்கு இடையேயான வார்த்தைப் போர் என்று விவரித்தார். இந்த கழுகுகள் ஜோடியைப் பார்த்தால் ஒருவருக்காகவே ஒருவர் படைக்கப்பட்டது போல் உள்ளது என எழுதியுள்ளனர். 


வீடியோவை இங்கே பார்க்கலாம்:



மேலும் படிக்க | பறவை கூட்டை தாக்கிய பாம்பு; சும்மா இருந்தா பறவை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR