திரைப்பட விழாவிற்கு ஆபாசமான உடையில் வந்த நடிகை மீது வழக்கு!!
எகிப்து கெய்ரோ திரைப்பட விழாவில் கவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பிரபல நடிகை மீது வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
எகிப்து கெய்ரோ திரைப்பட விழாவில் கவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பிரபல நடிகை மீது வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
எகிப்தைப் பொறுத்தவரை என்ன தான் சர்வதேச திரைப்பட விழாக்கள் என மார்டன் ஸ்டைல்கள் அரங்கேறி வந்தாலும், அந்த நாட்டு மக்களும், அரசும் இன்னும் பழமையை கடைப்பிடித்து வருகின்றன. இந்நிலையில், எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவிற்கு கவர்ச்சியான உடையில் வருகை தந்த நடிகை ரானியா யூசெப் மீது கெய்ரோ நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் 'கெய்ரோ சர்வதேச திரைப்பட விழா' (Cairo Film Festival) நடந்து வருகிறது. இந்த விழாவில் 44 வயதுடைய நடிகை ரானியா யூசெப், கருமை நிறத்தில் தொடை தெரிகிற அளவுக்கு ஆபாசமாக மெல்லிய உடை அணிந்து விழாவில் கலந்துகொண்டுள்ளார். இந்த ஆடை விவகாரம் அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் மீது அம்ரோ அப்தெல் சலாம், சமிர் சப்ரி என்னும் 2 வழக்கறிஞர்கள் கெய்ரோ நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கில் நடிகை ரானியா யூசெப் ஆபாச உடை அணிந்து வந்தது பாலுணர்வை தூண்டுவதாக அமைந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து, அவ்வாறு ஒழுக்கயீனமும், ஊக்குவிப்பையும் தூண்டும் வகையில் உடை உடுத்திக்கொண்டு திரைப்பட விழாவில் கலந்து கொண்டதற்காக நடிகை ரானியா யூசெப் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக ட்விட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்தது, இப்படி நான் ஆடை அணிந்தது இதுவே முதல் முறை, இது பெருத்த கோபத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என நான் உணரவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். எகிப்து சமூகத்தின் மதிப்பினைக் காக்க உறுதி எடுத்துக்கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீவிரமான இஸ்லாமியக் கொள்கைகளை பின்பற்றிவரும் நாடாக எகிப்து திகழ்ந்து வருகிறது. அங்குள்ள சட்டப்படி நடிகை ரானியா யூசெப் மீதான குற்றம் நிரூபணமானால் அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கப்படலாம். இவர் மீதான வழக்கு ஜனவரி 12 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது!