வன விலங்குகளைப் பார்த்தால் மக்கள் தான் பயப்படுவார்கள். அவற்றிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என முன்னெச்சரிக்கையாக யோசித்து செயல்படுவார்கள். குறிப்பாக சாலையில் செல்லும்போது குறுக்கே ஏதாவது ஒரு விலங்கு வந்துவிட்டால் சாலையில் செல்பவர்கள் தான் வாகனத்தை நிறுத்துவிட்டு ஓடுவார்கள். புலி, சிங்கம், யானை அல்லது கரடி என எதுவாக இருந்தாலும் எதிரில் நின்றுவிட்டால் சாலையில் செல்பவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடுவார்கள். ஆனால், இங்கு வைரலாகியிருக்கும் வீடியோவில் அதற்கு நேர்மாறாக நடந்திருக்கிறது ஒரு சம்பவம். சாலையின் குறுக்கே வந்த ஒரு யானை, தப்பித்தால் போதும்டா சாமி என்றளவுக்கு பயந்து ஓடுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Viral Video: முதல் முத்தம் கொடுத்த போதை... தலைகால் புரியாமல் சுற்றும் நாய்!


அந்தளவுக்கு யானைக்கே அலறலை ஏற்படுத்திய பெண்ணின் வீடியோவை தான் ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வீடியோவில் ஜெட் வேகத்தில்  இருச்சக்கர வாகனத்தில் செல்லும் பெண், யானை சாலையின் குறுக்கே வரும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. யானையும் யார் வந்தாலும் நம்மை பார்த்தால் நின்று தான் வருவார்கள் என்ற தொணியில் சாலையின் குறுக்கே வந்துவிட்டது. ஆனால், யானை திடீரென சாலையின் குறுக்கே வந்துவிட்டதால் வண்டியை அப்பெண்ணால் துளியும் கன்ட்ரோல் செய்ய முடியவில்லை.