Viral Video: முதல் முத்தம் கொடுத்த போதை... தலைகால் புரியாமல் சுற்றும் நாய்!

Viral Video: ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வரும் வீடியோவில் நாய் ஒன்று முதல் முத்தல் கிடைத்த சந்தோஷத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வீடியோ வெளியாகி ரசிகர்களை மிகவும் ரசிக்க வைத்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 3, 2023, 11:40 AM IST
  • முத்தத்தினால் மகிழ்ச்சி அடைந்த நாய் விடியோ.
  • இரண்டு செல்ல பிராணிகள் என்பதையும் நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம்.
  • இரண்டு விலங்குகளுக்கும் இடையிலான காதல் தருணங்களை கண்டு ரசிக்கும் நெட்டிசன்கள்.
Viral Video: முதல் முத்தம் கொடுத்த போதை... தலைகால் புரியாமல் சுற்றும் நாய்! title=

இணைய உலகில் பகிரப்படும் சில வேடிக்கையான, அரிய தருணங்களை காட்டும் வீடியோக்கள் நம் டென்ஷனை போக்கும் மாமருந்துகள். இவை மனதை மிகவும் லேசாக்கி விடும். அன்றாட டென்ஷன்களில் இருந்து தப்பிக்க இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள் பெரிய வளவில் உதவுகின்றன. இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன. செல்ல பிராணிகளுக்கு இடையிலான நட்பை அல்லது காதலை வெளிப்படுத்தும் தருணங்கள் பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். இப்படி ஒரு காணொளியை பார்த்தால் மக்களின் மனநிலை நேர்ம்றை எண்ணங்கள் நிறைந்து இருக்கும். தற்போது ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வரும் வீடியோவில் நாய் ஒன்று முதல் முத்தல் கிடைத்த சந்தோஷத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வீடியோ வெளியாகி ரசிகர்களை மிகவும் ரசிக்க வைத்துள்ளது

வைரலாகும் வீடியோவில் உள்ள காட்சிகளில், நாய் ஒன்றின் எதிரே, மற்றொரு நாய் இருப்பதை உள்ளதை காண்லாம். இரண்டு செல்ல பிராணிகள் என்பதையும் நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம். அதில் சிறிய அளவில் இருக்கும் ஒரு நாய், பெரிய நாய்க்கு முத்தம் கொடுக்கிறது.  அதனால், சரக்கு அடித்தது போல் போதை ஏறிய அந்த நாய்  மிக வேகமாக சுழன்று தனது சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறது. வைரலாகும் அந்த வீடியோவை கீழே  காணலாம்.

முத்தத்தினால் மகிழ்ச்சி அடைந்த நாய் விடியோ:

 

 

வைரலாகும் இந்த வீடியோ The first kiss என்ற தலைப்பில் Buitengebieden (@buitengebieden) என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.  வெளியான ஒரு நாளிலேயே ட்விட்டரில் 13.3 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த இரண்டு விலங்குகளுக்கும் இடையிலான காதல் தருணங்களை கண்டு மகிழ்ந்து பலர் ஆச்சரியப்பட்டு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன் இதே போல வைரலான நாய் வீடியோவில், நாய் ஒன்று பூனைக்குட்டியின் எதிரே உள்ளதை காண்லாம். இரண்டு செல்ல பிராணிகள் என்பதையும் நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம். அதில் நாய்க்கும் பூனை குட்டிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல் மிகவும் சுவாரஸ்யமானது. முதலில் இரண்டு இடையே ஏதோ மோதல் வெடித்த நிலையில், நாயும் பூனையும் கட்டிப் புரளுகின்றன. ஆனால், நாய் என்ன நினைத்ததோ, உடனை தன்னை விடுவித்துக் கொண்டு, மிக வேகமாக சுழலுகிறது. அதனை பார்த்த பூனை புரியாமல் குழம்புகிறது. சமூக வலைதளத்தில் வைரலாகும் நாய் குட்டி - பூனைக்குட்டி வீடியோவைக் கீழே உள்ள இணைப்பில் காணலாம். 

மேலும் படிக்க | Viral Video: கில்லாடிம்மா நீ... சண்டையிட்ட பூனைக்குட்டியை குழப்பிய 

விலங்குகள், குறிப்பாக வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் தினம் தினம் மனிதர்களை பரவசத்துக்கு ஆளாக்குபவை என்றால் மிகை இல்லை செல்ல பிராணிகள் செய்யும் குறும்புகள், செயல்கள் எல்லாமே ரசிக்கும்படி இருப்பவை. எப்போதும் நமக்கு ஆனந்த அதிர்ச்சிகளையும், ஆச்சர்யங்களையும் அள்ளிக் கொடுக்க வல்லன. அதிலும் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் நமது வீட்டின் ஒரு அங்கத்தினர் போல் ஆகி விடுகிறது. அதில் நாய்களும் பூனைகளும் முதலிடம் வகிக்கின்றன. 

மேலும் படிக்க | Viral Video: இனி வீட்டை விட்டு போவியா... பூனை குட்டியை பின்னி பெடலெடுத்த தாய் பூனை!

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News