யானைகள் வீடியோவுக்கு இணையத்தில் எப்போதும் வரவேற்பு இருக்கும். உணவுக்காக அலைவது முதல் குட்டிகளை பத்திரமாக அழைத்துச் செல்வது வரை யானைகளின் வீடியோ காண்போரை ரசிக்க வைக்கும். அண்மையில் வைரலான வீடியோ ஒன்றில், இரண்டு குட்டிகளை ஈன்ற யானையைக் காண முடிந்தது. இது அதிசயம் என வனத்துறை அதிகாரிகள் கூட தெரிவித்திருந்தனர். குட்டிகளை ஈன்றதுடன், அவற்றை பத்திரமாக பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் அழகு, காண்போரை வியக்க வைத்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Viral video: ஆக்கிரோஷமாக தாக்கும் கீரி; சிக்கித் தவிக்கும் ராஜ நாகம்


இன்னொரு வீடியோவில் கூட்டமாக செல்லும் யானைக் கூட்டம், மின் கம்பிகளை தாண்டிச் செல்ல நேரிடுகிறது. அப்போது, யானைக் கூட்டத்தில் இருந்த குட்டி யானைகள் அந்த மின் கம்பிகளை தாண்ட முடியாமல் தடுமாறுகின்றன. யானைகள் கூட்டமாக செல்வதை வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்த மக்கள், யானைகளை மின் கம்பிகளை அழுத்தி பிடிக்குமாறு கூறுகின்றனர். அவர்களின் பேச்சைக் கேட்ட யானைகள், மின் கம்பிகளை அழுத்திப் பிடித்தவுடன் குட்டியானைகள் மின் கம்பிகளை தாண்டிச் செல்கின்றன. இது சோஷியல் மீடியாவில் கவனத்தை பெற்ற நிலையில், இன்னொரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 



கோடை காலம் என்பதால், வன விலங்குகள் தண்ணீர் தேடி இடம் பெயர்ந்து கொண்டிருக்கின்றன. யானைக் கூட்டம் ஒன்றும் தண்ணீர் இருக்கும் இடம் தேடிச் சென்றிருக்கிறது. அப்போது, தண்ணீரைக் குடித்த குட்டியானைகள் இரண்டு ஜாலியாக சண்டை போட்டுக் கொள்கின்றன. இது நெட்டிசன்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. டிவிட்டரில் மட்டும் இந்த வீடியோ சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. 


மேலும் படிக்க | Viral Video: காதலியை அடைய இரு ஆண்புலிகளுக்கு இடையில் நடக்கும் போராட்டம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR