உலகின் மிகப் பிரபலமான கோடீஸ்வரர்களில் ஒருவரான ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்கின் காதலி கிரிம்ஸ் ஒரு விசித்திரமான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். கிரிம்ஸ் தனது காதலனைப் போல செவ்வாய் கிரகத்தில் குடியேற வேண்டும் என்று கனவு காண்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'செவ்வாய் கிரகத்தில் இறக்கத் தயாராக' இருப்பதாக கிரிம்ஸ் சமூக ஊடகங்களில் தெரிவித்தார். கோடீஸ்வரர் எலோன் மஸ்க் (Elon Musk) செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதற்காக தனது முதன்மை ராக்கெட்டை 3 முறை அனுப்பி, துரதிஷ்டவசமாக 3 முறையும் அது தோல்வியில் முடிந்துள்ள இந்த நேரத்தில் கிரிம்ஸ் இப்படிபட்ட ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். 



இன்னும் பல விசித்திரமான ஆசைகளைக் கொண்டுள்ளார்


பாடகர் கிரிம்ஸ் மற்றும் எலோன் மஸ்க் ஆகியோருக்கு ஒரு மகனும் உள்ளார். கிரிம்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், செவ்வாய் கிரகத்தின் சிவப்பு தூசியில் இறக்க தயாராக இருப்பதாக எழுதினார். முன்னதாக, ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், கிரிம்ஸ் தனது 50 வயதில் செவ்வாய் கிரகத்திற்குச் (Mars) செல்ல விரும்புவதாகக் கூறியிருந்தார். செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடிபெயர வைக்கும் பணியில் ஈடுபட விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார். முன்னரே மூன்றாம் உலகப் போருக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் மனித குடியேற்றங்களை ஏற்படுத்தப் போவதாக எலன் மஸ்க் அறிவித்திருந்தார். 


ALSO READ: உலகின் மிகப் பெரிய டெலெஸ்கோப் FAST; சீனாவின் பிரம்மாண்டமான Sky Eye


ஆரம்ப முயற்சியில் எலன் மஸ்குக்கு கிடைத்தது அதிர்ச்சி 


குறிப்பிடத்தக்க வகையில், மஸ்க் 3 ராக்கெட்டுகளை (Rocket) ஒன்றன்பின் ஒன்றாக சோதனை செய்துள்ளார். எலன் மஸ்க் தனது ஆரம்ப முயற்சியில் பின்னடைவை சந்தித்துள்ளார். செவ்வாய் கிரகத்திற்கு செல்ல வேண்டும் என்று கனவு கண்ட எலோன் மஸ்கின் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் இன்னும் வெற்றி இலக்கை எட்டவில்லை. நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மாடல் எஸ்.என் 11 ராக்கெட் செவ்வாய்க்கிழமை காலை டெக்சாஸுக்கு பறந்தது, ஆனால் தரையிறங்குவதற்கு சற்று முன்பு வெடித்தது. முன்னதாக, எஸ்.என் 10 ராக்கெட்டும் தரையிறங்கியது, ஆனால் சில நிமிடங்கள் கழித்து அதுவும் விபத்துக்குள்ளானது.


ALSO READ: 12 மணியே அடிக்காத கடிகாரம் கூட இருக்கு தெரியுமா? காரணம் காதல் தான்...யார் மீது?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR