மக்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அனுப்ப தயாராகிறது Elon Musk-ன் SpaceX

இந்த விண்வெளி சுற்றுலா செல்ல தேர்ந்தெடுக்கப்பட உள்ளவர்களில், ஒரு சுகாதாரப் பணியாளர் இருப்பார். அவர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 2, 2021, 10:51 AM IST
  • ஸ்பேஸ்எக்ஸ் திங்களன்று ஒரு மாபெரும் அறிவிப்பை வெளியிட்டது.
  • பொது மக்களில் சிலர் விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
  • இது பற்றிய ஒரு விளம்பரத்தை ஒளிபரப்ப SpaceX நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மக்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அனுப்ப தயாராகிறது Elon Musk-ன் SpaceX title=

ஸ்பேஸ்எக்ஸ் திங்களன்று ஒரு மாபெரும் அறிவிப்பை வெளியிட்டது. ஒரு க்ரூ டிராகன் காப்ஸ்யூலில் நான்கு தனிநபர்களை பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் அனுப்பப்போவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ‘உலகின் முதல் சிவிலியன் மிஷன்’ அதாவது, பொதுமக்களை பூமியை விட்டு வெளியே அழைத்துச் செல்லும் ஒரு சுற்றுலா பயணம் போன்றதொரு பணித்திட்டமாக இருக்கும். இந்த பணித்திட்டம் 2021 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

SpaceX நிறுவனத்தின் விண்கலத்திற்கு Shift4 Payments இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜாரெட் ஐசக்மேன் தலைமை வகிப்பார். அவர் ஒரு பயிற்சி பெற்ற விமானியும் ஆவார். இன்ஸ்பிரேஷன் 4 என அழைக்கப்படும் இந்த பணி செயின்ட் ஜூட் குழந்தைகள் ஆராய்ச்சி மருத்துவமனைக்கு ஆதரவை திரட்ட முற்படுகிறது.

"ஷிப்ட் 4 பேமெண்ட்சின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜாரெட் ஐசக்மேன், டிராகன், அதாவது இந்த விண்கலத்தில் உள்ள மூன்று இருக்கைகளை பொது மக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படப் போகும் தனிநபர்களுக்கு நன்கொடையாக அளிக்கிறார். இந்த பயணத்திற்கு பொது மக்களில் யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது வரும் வாரங்களில் அறிவிக்கப்படும்" என்று அந்த அறிக்கை கூறுகிறது.

ALSO READ: இந்தியா வருகிறது Elon Musk-ன் Tesla: Bengaluru-வில் துணை நிறுவனம் பதிவு

“பால்கன் 9 ஏவுதல் வாகனம் மற்றும் டிராகன் விண்கலம், சுற்றுப்பாதை இயக்கவியல், மைக்ரோ கிராவிட்டி, பூஜ்ஜிய ஈர்ப்பு மற்றும் பிற வகையான அழுத்த சோதனைகளில் SpaceX மூலம் இன்ஸ்பிரேஷன் 4 குழுவினர் வணிக விண்வெளி பயிற்சியைப் பெறுவார்கள். அர்களுக்கு அவசரகால தயார்நிலை பயிற்சி, விண்வெளி மற்றும் விண்கல நுழைவு மற்றும் முன்னேற்ற பயிற்சிகளும் அளிக்கப்படும். அத்துடன் பகுதி மற்றும் முழு பணி உருவகப்படுத்துதல்களிலும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்” என்று அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இந்த விண்வெளி (Space) சுற்றுலா செல்ல தேர்ந்தெடுக்கப்பட உள்ளவர்களில், ஒரு சுகாதாரப் பணியாளர் இருப்பார். அவர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. செயின்ட் ஜூடிற்கு குறைந்தபட்சம் 200 மில்லியன் டாலர்களை திரட்டும் முயற்சியை சார்ந்து இதில் பயணிக்கவுள்ள மற்றவ்ரகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தனிப்பயனாக்கப்பட்ட விமானப் பாதையில் ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் பூமியைச் சுற்றும் இந்த பல நாள் பயணம், மிஷன் கட்டுப்பாட்டின் மூலம் ஒவ்வொரு கட்டத்திலும் கவனமாக கண்காணிக்கப்படும். பணித்திட்டம் முடிந்ததும், டிராகன் எனப்படும் இந்த விண்கலம் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்து புளோரிடா (Florida) கடற்கரையில் ஒரு மென்மையான நீர் தரையிறங்கலை மேற்கொள்ளும்.

ஐசக்ஸனின் தளத்தை பயன்படுத்துபவர்களிடையே இந்த மாதம் தொடங்கும் ஒரு போட்டியின் மூலம் இந்த விணகலத்தில் பயணிக்கவுள்ள நான்காவது நபர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஞாயிற்றுக்கிழமை நடக்கும் சூப்பர் பவுலின் போது இது பற்றிய ஒரு விளம்பரத்தை ஒளிபரப்ப எலன் மஸ்கின் (Elon Musk) SpaceX நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ALSO READ: Elon Musk: உலகின் No.1 பணக்காரரைப் பற்றிய 10 சுவாரசியமான விஷயங்கள்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News