சிக்கிய பாம்பை காப்பாற்றிய பொதுமக்கள்: நெகிழ வைக்கும் வீடியோ
சிங்காநல்லூரில் பாம்பை, கீரியிடம் இருந்து பொதுமக்கள் மீட்ட சம்பவம் சமூக ஆர்வளர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சிங்காநல்லூரை அடுத்த நீலிகோணம்பாளையம் ரெயில் நிலையம் பின்புறம் சாரைப்பாம்பை, கீரி ஒன்று துரத்தி வந்தது. இதனால் அந்த பாம்பு அங்கிருந்த வலையில் மாட்டிக்கொண்டது.
ஏதோ சத்தம் வருவதை கேட்டு அங்கு இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். அப்போது பாம்பும், கீரியும் சண்டை போட்டுக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அங்கிருந்த மக்கள் கீரியை துரத்தி விட்டனர். அதன் பன்னர் அந்த பாம்பால் அந்த வலையில் இருந்து வெளிவே வர முடியவில்லை. பின்னர் இதுகுறித்து பொதுமக்கள் சிங்காநல்லூரை சேர்ந்த பாம்பு பிடி வீரரும், வக்கீலும் மான 25 வயது சித்திரன் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | சாலையில் ஒய்யாரமாய் யானை, பீதியில் வாகன ஓட்டிகள்: வீடியோ வைரல்
தகவல் அறிந்த உடனே அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் வலையை அறுத்து அதில் மாட்டிக் கொண்டிருந்த பாம்பை பத்திரமாக மீட்டார். இதையடுத்து பிடிப்பட்ட பாம்பை வனத்துறையினடம் ஓப்படைத்தார்.
பாம்பு மீட்கப்பட்ட அந்த வீடியோவை இங்கே காணலாம்:
வனத்துறையினர் பாம்பை சோதனை செய்து வனப்பகுதிக்குள் விட்டனர்.
இதுகுறித்து சித்திரன் கூறும்போது, ‘நான் வக்கீலாக வேலை செய்து வருகிறேன். எனக்கு பாம்புகள் மீது ஆர்வம் ஏற்பட்டது. அதனால் பாம்புகள் குறித்து பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். மேலும் பாம்புகளை மீட்பது எப்படி என்பதை கற்று கொண்டேன்.
பொதுமக்கள் வீடுகளில் பாம்பு புகுந்தால் எனக்கு தகவல் தெரிவிப்பார்கள். நான் உடனே அங்கு சென்று பாம்பை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைப்பேன். கடந்த 1 வருடமாக 300 பாம்புகளை பிடித்துள்ளேன்’ என்றார்.
சிங்காநல்லூரில் பாம்பை, கீரியிடம் இருந்து பொதுமக்கள் மீட்ட சம்பவம் சமூக ஆர்வளர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | பயங்கர பாம்பை பொம்மையாக்கி விளையாடிய குழந்தைகள்: திகிலூட்டும் வைரல் வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR