பாம்பை கதற விட்ட பூனை, சினிமாவை மிஞ்சிய சண்டை: வைரல் வீடியோ

Viral Video: பாம்புக்கும் பூனைக்கும் இடையில் நடக்கும் சண்டையின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது. பின்னிப்பிணைந்து எகிறி எகிறி நடக்கும் இந்த சண்டை சினிமாவை மிஞ்சும் வகையில் உள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 5, 2022, 04:16 PM IST
  • பாம்புக்கும் பூனைக்கும் சண்டை.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
  • சினிமாவை மிஞ்சும் திகில் வீடியோ.
பாம்பை கதற விட்ட பூனை, சினிமாவை மிஞ்சிய சண்டை: வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

விலங்குகளின் சண்டை தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிகளவில் வைரலாகி வருகின்றன. பூனை பல விலங்குகளிடம் சண்டையிட்டு மாட்டிக்கொள்வதையும், பாம்பு பிற விலங்குகளிடம் சண்டையில் ஜெயிப்பதையும் நாம் பார்த்துள்ளோம். ஆனால் பாம்பிடம் பூனை சண்டையிடுவதை நீங்கள் பார்த்திருப்பது அரிதான விஷயமாகும். 

பாம்பு மற்றும் பூனையின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. வீட்டிற்குள் புகுந்த பாம்பை பார்த்து பூனை வெறிகொண்டு அதை பயங்கரமாக தாக்குவதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. 

பாம்புக்கும் பூனைக்கும் இடையில் திகிலூட்டும் சண்டை 

வைரலாகி வரும் இந்த வீடியோவில், வீட்டில் பூனை ஒன்று இருப்பதை காண முடிகின்றது. அதற்கு அருகில் ஒரு நாயும் தெரிகிறது. திடீரென்று ஒரு பாம்பு வீட்டிற்குள் நுழைய முயல்கிறது. ஆனால் பாம்பை பூனை பார்த்துவிடுகிறது. பாம்பை கண்டதும் பூனைக்கு ஆத்திரம் வருகிறது. அது பாம்பின் மீது தனது முழு ஆத்திரத்தையும் காட்டுகிறது. 

மேலும் படிக்க | இறந்த செல்ல நாய்க்கு கோவில் கட்டிய முதியவர்: இணையவாசிகளை இளக வைத்த நிகழ்வு 

வீடியோவில் பாம்பும் பூனையும் போடும் சண்டை அபாயகரமாக இருக்கிறது. பூனையின் ஆக்ரோஷம் காண்பதற்கு வியக்கும் வகையில் உள்ளது. பூனை சண்டை இடுவதையும் பாம்பு அதற்கு அளிக்கும் எதிர்ப்பையும் வீடியோவில் காண முடிகின்றது. பூனையும் பாம்பும் பின்னிப்பிணைந்து எகிரி எகிரி சண்டை இடுவது பார்ப்பதற்கு வியப்பை அளிக்கின்றது.

பூனையிடம் பல்பு வாங்கிய பாம்பின் வீடியோவை இங்கே காணலாம்:

பூனை மற்றும் பாம்பின் சண்டை

இந்த காணொளியில் பாம்புக்கும் பூனைக்கும் இடையே கடுமையான சண்டை நடப்பதை காண முடிகின்றது. முதலில் பூனை பாம்பை வெல்வது போல் தெரிகிறது. ஆனால் பின்னர் பாம்பு ஒரு மிகப்பெரிய எதிர்த்தாக்குதல் மூலம் பூனையை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இந்த வீடியோ rasal_viper என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது.

மேலும் படிக்க | Viral Video: மரணம் நெருங்குவதை அறியாமல் பாம்பிடம் சிக்கி பலியான எலி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News