Viral Video Brother Sister Marrying : இணையத்தில் ஒரு நாளைக்கு எண்ணற்ற வீடியோக்கள் வைரலாகின்றன. இவற்றுள், எதை நம்புவது, எதை நம்பக்கூடாது என்பதும் தெரியவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு ட்ரெண்டை ஃபாலோ செய்ய, புதிதாக பலரையும் முகம் சுளிக்க வைக்கும் ஒரு ட்ரெண்டும் வைரலாகி வருகிறது. அதில் ஒன்றுதான், தந்தை-மகள் திருமணம் செய்து கொள்வதும், அண்ணன்-தந்தை திருமணம் செய்து கொள்வதும். இவர்கள் திருமணம் செய்து கொள்வதோடு மட்டுமன்றி, அதனை எடுத்து வீடியோவாக பதிவிட்டு இணையத்தில் வைரலாகியும் வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைரலான வீடியோ:


இணையத்தில் கடந்த சில நாட்களாக வைரலான இந்த வீடியோ மத்திய பிரதேசத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் பேசும் அந்த பெண், நெற்றி முழுவதும் திலகம் வைத்திருக்கிறார். வீடியோ எடுப்பவர் நீங்கள் யாரென்று கேட்க, அதற்கு அந்த பெண் “இது என் அண்ணன், நான் அவனது தங்கை. நாங்கள் இருவரும் காதலித்தோம் இப்போது திருமணம் செய்து கொண்டோம். அவனுக்கு குழந்தை வேண்டுமாம், அதனால் திருமணத்திற்கு சம்மதித்து விட்டேன்” என்று அந்த பெண் கூறுகிறார். 



— Sivangi Choudhury Mondal (@originalsibani) January 4, 2025



இதைத்தொடர்ந்து அவர் அருகில் நின்றிருந்த அந்த பையனும் பேசுகிறார். அப்போது, தங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் இப்போது வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் கூறுகிறார். மேலும், அந்த பெண் பள்ளி முடிந்து வரும் போது திருமணம் செய்து கொண்டதாக கூறுகிறார். அந்த பெண், வீடியோவில் தனக்கு 18 வயது ஆகிறது என்றும் கூறுகிறார். 


இது உண்மையா? 


இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து இணையவாசிகள் மட்டுமன்றி, ஊடக சேனல்கள் பலவும், இது குறித்து விசாரணை நடத்தின. பலர், இதனை உண்மை என நினைத்துக்கொண்டனர். ஆனால் உண்மையில், இந்த வீடியோ நடிக்கப்பட்டது என கூறப்படுகிறது. இந்த வீடியோ வைரலாக தொடங்கியது, பேஸ்புக் தளத்தில்தான். அதில் வீடியோ ஆரம்பிப்பதற்கு முன்னர் பொறுப்பு துறப்பு போடுகின்றனர். அதில், “இந்த வீடியோ பொழுது போக்கிற்காக எடுக்கப்பட்டது மட்டுமே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தெரியாமல் பலர் இதனை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கெல்லாம் அனுப்பி திட்டி தீர்த்து வருகின்றனர். 


மேலும் படிக்க | சீச்சீ! அப்பாவே மகளை திருமணம் செய்து கொண்ட அவலம்..என்னங்க நடக்குது இங்க?


மேலும் படிக்க | இறந்த ஆண் பாம்பை பார்த்து துடிதுடித்த பெண் பாம்பு - வைரல் வீடியோ


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ