Snake Viral Video | பாம்பு கதைகள் பல கேட்டிருப்பீர்கள். திரைப்படங்கள் கூட நாக தேவதை கதைகள் பல வந்திருக்கின்றன. விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் கொண்டவையாக இருக்கும் பாம்பு கதைகளை நிஜத்தில் காட்டியிருக்கிறது மத்திய பிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவம். ஜேசிபி வண்டியின் சக்கரத்தில் சிக்கி ஆண் பாம்பு உயிரிழக்க அதன் உடலருகே வந்து இருந்து துடியாய் துடிக்கிறது பெண் பாம்பு. காண்போரின் நெஞ்சை உருக வைக்கும் இந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
சத்திரி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் வயலில் துப்புரவு பணி நடந்து வருகிறது. இப்பணிக்காக ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. ஜேசிபி இயந்திரம் வேகமாக வேலை செய்தது. இந்த நேரத்தில், விளை நிலத்துக்குள் உள்ள துளைக்குள் மறைந்திருந்த ஒரு ஜோடி பாம்புகள் ஜேசிபியின் பக்கெட்டில் எதிர்பாராமல் சிக்கியிருக்கின்றன. அதில் ஆண் பாம்பு ஒன்று அப்போதே உயிரிழந்துவிட்டது. பெண் பாம்புக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தையடுத்து, இயந்திர ஆபரேட்டர் பணியை நிறுத்தினார். பண்ணை உரிமையாளரும் மற்றவர்களும் ஜோடி பாம்புகளை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இறந்த பாம்பு உடலை ஒரு இடத்தில் எடுத்து போட்டதுடன், உயிரிருடன் இருந்த பெண் பாம்புக்கு தண்ணீர் கொடுத்தனர். இருப்பினும் அந்த பெண் பாம்பு ஆண் பாம்பின் உடலையே துடிதுடித்து பார்த்துக் கொண்டிருந்தது. எந்தவித அசைவும் இல்லாதபோதும், ஆண் பாம்பை விட்டு பெண் பாம்பு நகரவே இல்லை. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அந்த இடத்திலேயே பெண் பாம்பு இருந்தது. ஆண் பாம்பு வந்தால் செல்லலாம் என காத்திருந்தாலும், அது பயனில்லாமல் போனது.
உடனடியாக அப்பகுதியில் இருந்த பாம்பு பிடி வீரர் சல்மான் என்பவருக்கு பண்ணை உரிமையாளர் தகவல் கொடுத்தார். உடனடியாக அங்கு வந்த அவர், காயமடைந்த பாம்புக்கு சிகிச்சை அளித்ததுடன், அந்த பாம்பை பாதுகாப்பான இடத்தில் விடுவதற்கு எடுத்துச் சென்றார். அந்த இடத்தில் காணப்படும் அடையாளங்களைப் பார்க்கும்போது, இந்த ஆண் பாம்புகள் பல ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்ததாகத் தெரிகிறது. குளிர்காலம் வந்துவிட்டாலே பாம்புகளுக்கு பிடிக்காது. எனவே அவை நிலத்தடி, துளைகள் அல்லது விரிசல்களில் சென்று அடைகலம் அடைந்துவிடும். அந்தவகையில் தான் இந்த இரண்டு பாம்புகளும் இருந்திருக்கின்றன.
பாம்பு வைரல் வீடியோ
(@KrishnaBihariS2) January 2, 2025
எதிர்பாராமல் நடைபெற்ற சோக சம்பவத்தின் காரணமாக பாம்புகள் இரண்டும் இப்போது பிரிய நேரிட்டுள்ளது. இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
மேலும் படிக்க | எலக்ட்ரிக் காரை இப்படியெல்லாம் யூஸ் பண்ணலாமா? அந்த கூத்தை நீங்களே பாருங்க..
மேலும் படிக்க | குடித்து விட்டு கார் ஓட்டுநரை தாக்கிய பெண்..அடிச்சதுக்கு இதெல்லாம் ஒரு காரணமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ