முன்னாள் ஆபாச திரைப்பட நட்சத்திரம் மியா கலீஃபா தனது பல மில்லியன் ரசிகர்களுக்கு ஒரு கிறிஸ்துமஸ் விருந்து அளிக்கும் வகையில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் ஆபாச திரைப்பட நட்சத்திரமும் பிரபல சமூக ஊடக ஆளுமையுமான மியா கலீஃபா மீண்டும் இணையத்தை வசீகரிக்கத் துவங்கியுள்ளார். ஆனால் இந்த முறை வரவிருக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை எதிர்பார்த்து வியக்கத்தக்க ஹோமி தோற்றத்துடன்.


தனது ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்ட ஒரு படத்தில், லெபனானில் பிறந்த மாடல் அழகி, மான் போன்று உடை அணிந்து துள்ளி துள்ளி குதித்துக்கொண்டு “நான் உங்கள் கிறிஸ்துமஸ் விடுமுறை விருந்து” என்ற உரைத்துள்ளார். இவை அனைத்தும் பரிசு, பனிமனிதர்களால் சூழப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்தின் முன் மண்டியிட்டு அவர் கூறம் வார்த்தைகள். இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.



இந்த புகைப்படத்தினை மியா கலீஃபா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டவுடன் அவரது ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பெருமளவில் பகிர துவங்கியுள்ளனர். இதனால் இந்த புகைப்படம் தற்போது வரையிலும் சுமார் 3.5 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.


வயதுவந்த திரைப்படத் துறையில் தனது வாழ்க்கை சுருக்கமானதாக இருந்தபோதிலும், மியா கலீஃபாவால் மிகவும் பிரபலமான ஆபாச நட்சத்திரங்களில் ஒருவராக மாற முடிந்தது. இருப்பினும், அவரது புகழ் அவருக்கு பெரிய லாபத்தை ஏதும் தரவில்லை. சமீபத்தில், கலீஃபா தான் தொழிலில் பணியாற்றிய மூன்று மாதங்களில் சுமார் 12,000 டாலர்களை மட்டுமே சம்பாதித்ததாக வெளிப்படுத்தினார். எனினும், சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதால், அவர் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறார்.



சமீபத்தில் வெளியான அறிக்கை ஒன்றின் படி, இணையத்தில் அதிகம் தேடப்பட்ட ஆபாச நடிகை என்னும் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார் மியா கலீஃபா. முன்னணி வயது வந்தோருக்கான திரைப்பட இணையதளத்தில் தற்போது அதிகம் தேடப்பட்ட இரண்டாவது இடத்தைப் பிடித்த 26 வயதான பெண், தொடர்ந்து ஊடகங்களின் கவனத்தால் திகிலடைந்துள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் அதிகளவு புகழ் காரணமாக ஆபாசத் துறையிலிருந்து விலகியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.