Monalisa Fake AI Video Viral: உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா 2025 மிகவும் விவாதத்திற்குரிய விஷயமாக மாறியுள்ளது. மேலும் இந்தியாவிலிருந்து மட்டுமின்றி வெளிநாட்டிலிருந்தும் பலர் மகா கும்பமேளாவை காண வருகிறார்கள். இது தவிர பாலிவுட் முதல் தொலைக்காட்சி வரை பல பிரபலங்களும் மகா கும்பமேளாவில் நீராடியுள்ளனர். அதேபோல் இந்த மகா கும்பமேளாவில் பல சாமியர்களும், மகான்களும் பங்கேற்று உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் 2025 மகா கும்பமேளாவில் துறவிகளைத் தவிர, பலர் அதிக விவாதத்திற்கு உட்பட்டு உள்ளனர். ஹர்ஷா ரிச்சாரியா, ஐஐடிஏஎன் பாபாவும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றனர். அவர்களை எல்லாம் மீறி மாலை விற்றுக் கொண்டிருந்த மோனாலிசா மிகவும் வைரலானர். இணையதளம் முழுவதும் அவரின் பேச்சாகவே இருந்தது. அவரின் அழகைக் கண்டு அனைவரும் திகைத்தனர். யார் இந்த மோனாலிசா? எனத் தேடத் தொடங்கினர். அவரை பேட்டி எடுக்க போட்டி போட்டுக் கொண்டனர். 


சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படும் மோனாலிசாவுக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வருகிறது. சில காலத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட மோனாலிசாவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் மிகவும் ஸ்டைலாக இருக்கிறார்.


 



 


ஆனால் மிகவும் எளிமையாகவும் மேக்கப் இல்லாமல் இருக்கும் மோனாலிசாவை, எப்படி கவர்ச்சியான தோற்றத்தில் பார்க்க முடிகிறது என்பதுதான் ஆச்சரியமான விஷயம். மோனாலிசாவின் இந்த தோற்றம் குறித்து பலர் கேள்வி எழுப்புவதையும் காண முடிகிறது.


ஏனெனில் மோனாலிசாவின் இந்த வீடியோ முற்றிலும் போலியானது மற்றும் இது AI மூலம் உருவாக்கப்பட்டது. சமீப காலமாக மோனாலிசாவின் பல படங்கள் மற்றும் வீடியோக்கள் எடிட் செய்யப்பட்டு பகிரப்படுகிறது. பல திரைப்பிரபலங்களின் எடிட் செய்யப்பட்ட படங்களும் வீடியோவும் வைரலாவது போல, மோனாலிசாவின் வீடியோவும் வைரலாகி வருகிறது. எனவே இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.


மேலும் படிக்க - பிரமிக்க வைக்கும் கும்பமேளாவின் பேரழகி சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த மோனாலிசா யார்?


மேலும் படிக்க - மகா கும்பமேளா நிகழ்ச்சியை 24 மணிநேரமும் நேரடியாக இலவசமாக பார்க்கலாம்! எப்படி?


மேலும் படிக்க - கும்பமேளாவுக்கும்... மகா கும்பமேளாவுக்கும்... என்ன வித்தியாசம் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ