வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் பல்வேறு வகையான வீடியோக்களை நாம் பார்க்கிறோம். ஆனால், சில வீடியோக்கள் மிகவும் வித்தியாசமாக மிகவும் ஆச்சரியம் அளிக்கும் வகையிலும் இருக்கின்றன. இவை இணையத்தில் பகிரப்பட்ட உடனேயெ அதிகம் வைரல் ஆகி விடுகின்றன. அதுவும் குரங்குகள், நாய், பூனை, பாம்பு, புலி, சிங்கம் போன்ற விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் அதிக மவுசு உள்ளது. குறிப்பாக குரங்குகளின் வீடியோகளுக்கு இரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. 


குரங்குகளின் குறும்பு வீடியோக்கள் தினம் தினம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவை பார்ப்பதற்கு மிக கியூட்டாக இருந்து, இணையவாசிகளின் உள்ளங்களை கொள்ளைகொள்கின்றன. குறிப்பாக மிக வித்தியாசமான, விசித்திரமான பல குரங்கு வீடியோக்களை நாம் இணையத்தில் தினமும் காண்கிறோம். தற்போதும் அப்படி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது ஒரு குரங்கு மற்றும் நாய் பற்றியது. 


சில விலங்குகளை மக்கள் வீடுகளில் வளர்க்கிறார்கள். நாய், பூனை ஆகியவை இவற்றில் மிக அதிகமாக வளர்க்கப்படுகின்றன. இந்த நாட்களில் குரங்குகளை கூட சிலர் வீடுகளில் வளர்க்கிறார்கள். பொதுவாக சில வீடுகளில் இரு மிருகங்கள் வளர்க்கப்பட்டால், அவற்றுக்கு இடையில் சண்டை வருவது சகஜம்தான்.  


மேலும் படிக்க | உணவுக்காக தீனி தேடாமல் அழகுக்காக உணவு சேர்க்கும் க்யூட் பறவை


குரங்கு மற்றும் நாயின் சண்டை


குரங்குக்கும் நாய்க்கும் இடையில் நடக்கும் வலுவான சண்டையின் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகின்றது. நாயும் குரங்கும் ஒன்றுடன் ஒன்று சண்டையிட தயாராக இருப்பதை வீடியோவின் துவக்கத்தில் காண முடிகின்றது. இந்த வீடியோவை பார்க்கும்போது இந்த இரண்டு விலங்குகளும் உண்மையான எதிரிகளா என வியக்கத்தோன்றுகிறது. 


முதலில் குரங்கும் நாயும் ஒன்றை ஒன்று பார்த்துவிட்டு பின்னர் சண்டையிடத் தொடங்குகின்றன. குரங்கு நாயின் மீது பாய்ந்து அதன் கழுத்தைப் பிடிக்கிறது. குரங்கின் பிடியிலிருந்து நாய் தன்னை விடுவித்துக் கொள்ள முயல்கிறது. நாயை குரங்கு வலுவாக பிடித்துக்கொள்கிறது. ஆனாலும், நாய் மனம் தளராமல், குரங்குக்கு சமமான போட்டியை கொடுக்கிறது. இடையில் குரங்கு நாயைப் பிடித்துக் கொண்டதில் நாய் கத்த ஆரம்பிக்கிறது. ஆனால் குரங்கு நாயை விட்டு செல்ல தயாராக இல்லை. இந்த சண்டையின் முடிவில் என்ன ஆனது என்பது வீடியோவில் காட்டப்படவில்லை. ஆனால், இரண்டு விலங்குகளும் செல்லப் பிராணிகள் என்றும், இது ஒரு அன்பான சண்டைதான் என்றும் இணையவாசிகள் கூறி வருகின்றனர். 


இந்த அற்புதமான வீடியோவை இங்கே காணலாம்:



சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் ஆகி வருகின்றது


இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் bilal.ahm4d என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. செய்தி எழுதும் நேரம் வரை, இந்த வீடியோவுக்கு 1 லட்சம் வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் அதை லைக் செய்துள்ளனர். மேலும் பல இணையவாசிகள் இந்த வீடியோவிற்கு தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பலர் குரங்கின் ஆடையை கவனித்து அது மிக அழகாக இருப்பதாகவும் பாராட்டி வருகிறார்கள். 


மேலும் படிக்க | எதுக்கெல்லாம் போட்டி போடறதுன்னு ஒரு விவஸ்தையில்லையா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ