முதலில் தான் ‘பரோட்டா’ சூரி; இப்போ ‘சிக்ஸ்பேக்’ சூரி -SeePic..!

இளம் நடிகர்களை அலறவிட்ட ‘பரோட்டா’ சூரி-யின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது...!
இளம் நடிகர்களை அலறவிட்ட ‘பரோட்டா’ சூரி-யின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது...!
தமிழ் சினிமாவில் பரோட்டோ சூரியாக பிரபலமடைந்து முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் சீமராஜா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்திற்காக காமெடியில் மட்டும் மெனக்கெடாமல் தனது உடல் அமைப்பையும் முழுவதுமாக மாற்றியுள்ளார்.
இவர் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி மூலம், பிரபலமானவர் `பரோட்டா சூரி. சந்தானம் கதாநாயகனாக பரிமாணமெடுத்தபோது, அவரது இடத்தை தன் குணச்சித்திர நடிப்பால் நிரப்பியவர். தமிழில் முன்னணி நடிகர்களான, அஜித், விஜய், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருடன் நடித்து, தனக்கெனப் புதிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதிலும், சிவகார்த்திகேயன்- சூரி கூட்டணிக்குத் தனி ரசிகர்களே உண்டு.
அந்தவகையில் ‘சிக்ஸ்பேக்’குடன் நடிகர் சூரி நின்று கொண்டிருப்பது போன்றதொரு புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ``இது நம்ப சிக்ஸ்பேக் சூரி. 8 மாத கால, கடின உழைப்பு இது. இந்தப் புகைப்படத்தை ஷேர் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்’என்று குறிப்பிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். சூரியின் இந்தப் புதிய அவதாரம், அவரது ரசிகர்களை, உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த புகைப்படத்திற்கு நடிகை சிம்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ``இதுதான் உண்மையான கடின உழைப்பு’’ என்று சூரியை பாராட்டியுள்ளார்.
பலரும் இந்தப் புகைப்படத்தை, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் - சூரி காம்போவில் சீமராஜா படம் இன்று வெளியாகியுள்ளது.