பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் பச்சான் பாண்டே திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வீரம். இந்த திரைப்படத்தில் தமன்னா, சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.


தமிழில் இத்திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்த நிலையில், தெலுங்கில் கட்டமராயுடு என்ற பெயரில் ரீமேக் ஆனது. இந்தப் படத்தில் பவன் கல்யாண் நடித்திருந்தார்.



இந்நிலையில் தற்போது இந்தப் படம் பச்சன் பாண்டே என்ற டைட்டிலுடன் இந்தியில் உருவாகியுள்ளது. இதில் நடிகர் அக்‌ஷய்குமார் நடித்துள்ளார்.


இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரினை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அதில், கருப்பு லுங்கி, கழுத்தில் தங்கச் சங்கிலிகள், கையில் நுன்சாக் ஆயுதத்துடன் தோன்றியுள்ளார் நடிகர் அக்‌ஷய்குமார்.


ஃபர்ஹாத் சாம்ஜி இயக்கும் இந்தப் படம் 2020-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியைத் தொடர்ந்து கன்னடத்திலும் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்துக்கது.