ஸ்மார்ட்போன் மற்றும் கணினியில் Facebook Videos எவ்வாறு பதிவிறக்கம் செய்வது? எளிய வழிமுறை
ஆண்ட்ராய்டு போன், ஐபோன், ஐபாட், மேக் அல்லது விண்டோஸில் எளிய வழிகளில் பேஸ்புக் வீடியோக்களை எவ்வாறு பதிவிறக்குவது என்பது இங்கே.
பேஸ்புக் வீடியோக்களைப் பதிவிறக்குவது என்பது YouTube வீடியோக்களைப் பதிவிறக்குவது போல் எளிதானது அல்ல. மிகப்பெரிய சமூக ஊடக நிறுவனங்களில் ஒன்றான பேஸ்புக் ஆஃப்லைனில் வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்ய ஒரு குறிப்பிட்ட அம்சத்தை வழங்குவதில்லை. உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன், ஐபோன், ஐபாட், மேக் அல்லது விண்டோஸ் ஸ்மார்ட்போனில் பேஸ்புக் வீடியோக்களைப் பதிவிறக்க விரும்பினால், நீங்கள் சில எளியமுறைகளை பின்பற்ற வேண்டும்.
ஆண்ட்ராய்டு போன், ஐபோன், ஐபாட், மேக் அல்லது விண்டோஸில் எளிய வழிகளில் பேஸ்புக் வீடியோக்களை எவ்வாறு பதிவிறக்குவது என்பது இங்கே.
விண்டோஸ் (Windows), மேக்கில் (Mac) பேஸ்புக் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி?
- பேஸ்புக் வீடியோக்களைப் பதிவிறக்க செய்ய அனுமதிக்கும் பல வலைத்தளங்கள் இணையத்தில் உள்ளன. fbdown.net என்ற வலைத்தளம் கிடைக்கக்கூடிய விருப்பங்களில் சிறந்த ஒன்றாகும்.
- முதலில் நீங்கள் பதிவிறக்க விரும்பும் பேஸ்புக் வீடியோவில் வலது கிளிக் செய்து, செய்யவும். வீடியோயின் URL-ஐ நகலெடுக்கவும்.
- அடுத்து, fbdown.net வலைத்தளத்திற்கு செல்லுங்கள்.
- பின்னர் பேஸ்புக் வீடியோ லிங்க் என இருக்கும் இடத்தில் URL-ஐ இட வேண்டும். அடுத்து பதிவிறக்க விருப்பத்தை சொடுக்கவும். பின்னர் சாதாரண (எஸ்டி) அல்லது எச்டி (HD) தரத்தில் வேண்டுமா என்பதை தேர்ந்தெடுக்கவும்.
- நீங்கள் வீடியோவில் வலது கிளிக் செய்து உங்கள் கணினியில் சேமிக்க வேண்டும்.
பேஸ்புக் வீடியோக்களை கணினியில் (Desktop) பதிவிறக்க செய்ய மற்றொரு வழி:
கணினியில் பேஸ்புக் வீடியோக்களைப் பதிவிறக்க பல பயன்பாடுகள் உள்ளன. 4kdownload.com சிறந்த ஒன்றாகும். இந்த இணையதளத்திலும் மேலே குறிப்பிட்டது போல எளிய வழிகளை பின்பற்றி வீடியோக்களை பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
ஆண்ட்ராய்டு போனில் Facebook வீடியோக்களை எவ்வாறு பதிவிறக்குவது?
- நீங்கள் பதிவிறக்க விரும்பும் பேஸ்புக் வீடியோவைக் கிளிக் செய்யவும்.
- பகிர் (Share) விருப்பத்தை கிளிக் செய்து, Copy லிங்க்-ஐ நகலெடுத்துக் கொள்ளவும்.
- அடுத்து, fbdown.net ஐத் திறந்து நகலெடுத்துக் Copy லிங்க்-ஐ இட வேண்டும். பதிவிறக்க விருப்பத்தை சொடுக்கவும்.
- நீங்கள் பேஸ்புக் வீடியோவை பதிவிறக்கம் செய்ய விரும்பும் வீடியோ தரத்தை தேர்வு செய்யவும்.
- Chrome இல் பதிவிறக்க இணைப்பைத் தேர்வுசெய்து, ஃபயர்பாக்ஸில் வீடியோவைச் சேமிக்கவும்
- பதிவிறக்கங்கள் கோப்புறையில் ஃபேஸ்புக் வீடியோ தானாகவே சேமிக்கப்படும்.
ஃபேஸ்புக் வீடியோக்களை ஐபோனில் பதிவிறக்குவது எப்படி?
- முதலில் நீங்கள் பதிவிறக்க விரும்பும் பேஸ்புக் வீடியோவைத் திறக்கவும்.
- பகிர் விருப்பத்தை கிளிக் செய்து, Copy லிங்க்-ஐ நகலெடு என்பதை அழுத்தவும்.
- வீடியோ பதிவிறக்குவதை ஆதரிக்கும் fbdown.net ஐத் திறக்கவும்.
- வீடியோ இணைப்பை இடவும், அடுத்து பதிவிறக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
- அடுத்து, நீங்கள் வீடியோவைப் பதிவிறக்க விரும்பும் தரத்தைத் தேர்ந்தெடுங்கள்.
- வீடியோவைச் சேமி என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து பதிவிறக்கலாம்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR