பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா (Siddaramaiah) சமீபத்தில் கர்நாடக சட்டசபையின் (Karnataka Assembly) ஒரு கூட்டத்தில் அவர் பேசியபோது, ​​அவரது வேட்டி எதிர்பாராத விதமாக அவிழ்ந்து விழுந்தது. அந்த காட்சி பல ஊடங்களில் ஒளிபரப்பப்பட்டது. வேட்டி அவிழ்ந்து விழுந்ததுக்கூட உணராமல் சித்தராமையா மிகவும் ஆவேசமாக உரையாற்றிக்கொண்டு இருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேட்டி அவிழ்ந்து விழுந்ததை கவனித்த கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவக்குமார் (Congress chief DK Shivakumar), உடனடியாக எழுந்து சென்று, தனது "பஞ்சே" (வேட்டி) விழுந்துவிட்டதாக சித்தராமையாவிடம் கூறினார்.


அதாவது சித்தராமையாவின் காதருகே சென்று வேட்டி அவிழ்ந்து விட்டது என சிவகுமார் மெதுவாகக் கூறினார். ஆனால் மைக்கில் பேசிக்கொண்டு இருந்த சித்தராமையா "ஓ. அப்படியா?" "வேட்டி கீழே விழுந்துவிட்டதா?" என மைக் ஆப் செய்யாமல் கூறியதால், இது அவையில் இருந்த அனைவருக்கும் கேட்டுவிட்டது. இதனை அறிந்து அவையில் இருந்தவர்கள் சிரித்ததால், அவை முழுவதும் ஒரே சிரிப்பொலியாக இருந்தது.


ALSO READ | ஈவு இரக்கமின்றி கொடூரமாக தாக்கப்பட்ட அப்பா-மகன் -Viral Video


அனைத்து உறுப்பினர்களையும் சபாநாயகரையும் சிரிக்க வைத்த காங்கிரஸ் மூத்த தலைவர் (Congress Leader) சித்தராமையா, வேட்டி அவிழ்ந்ததற்கான காரணத்தையும் கூறினார். உடல் எடை அதிகரித்து தொப்பை பெரிதாகிவிட்டது என நகைச்சுவையாக விளக்கமளித்தார். மேலும் அவரது வேட்டியை மீண்டும் இறுக்கி கட்டிக்கொண்டு, தொடர்ந்து பேசினார். 


இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் பலர் வேடிக்கையான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


 



ALSO READ | காங்கிரஸ் தலைவர் DK Shivakumar வீட்டில் CBI சோதனை; 50 லட்சம் ரூபாய் சிக்கியது!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR