சிரிப்புக்கு பஞ்சமில்லாத உலகமாக இணைய உலகம் இருக்கிறது. அங்கு நீங்கள் எதனை தேடுகிறீர்களோ அது உங்களுக்கு நொடிப்பொழுதில் கிடைத்துவிடும். காமெடி வீடியோக்கள் மட்டும் நாள்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் என்றாலும், அவற்றில் சிரிப்புக்கு பஞ்சமிருக்காது. வேண்டும் என்றே சிரிப்புக்காக உருவாக்கப்படும் வீடியோக்களும் உண்டு. எதார்ச்சையாக நடக்கும் காமெடிகள் படமாக்கப்பட்டு பகிரப்படுவதுண்டு. இரண்டுக்குமே இணையவாசிகளிடம் வரவேற்பு இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | வகுப்பிற்குள் நுழைந்த குரங்கு செய்ய வேண்டிய செயலா இது: வீடியோ வைரல்


இன்று நீங்கள் வேலைக்கு சென்று வந்து சோர்வாக இருந்தாலும் சரி, வேலையே இல்லாமல் பொழுதை கழிக்க மொபைலை பயன்படுத்திக் கொண்டிருந்தாலும் சரி, இந்த வீடியோ நிச்சயம் உங்களை சிரிக்க வைக்காமல் இருக்காது. அப்படி என்ன இருக்கிறது என நீங்கள் கேட்கலாம். உங்களை கலகலப்பாக சிரிக்க வைக்கும் சிரிப்பு மந்திரம் தான் இதில் இருக்கிறது. நண்பர்கள் சேர்ந்தாலே அங்கு சிரிப்புக்கு பஞ்சம் இருக்கிறது. கிண்டல் கேலி என அந்த இடமே ரணகளத்துடன் இருக்கும். இன்னும் மழை பெய்துவிட்டால் ஜாலியாக விளையாடிக் கொண்டிருப்பார்கள்.



பாவம் இந்த வீடியோவில் இருக்கும் நண்பர் ஒருவரின் வீட்டில் மழை காரணமாக சேறு குவியலாக வந்து தேங்கிவிட்டது. அதனை நண்பர்கள் உதவியுடன் கிளீன் செய்கிறார்.அந்த நேரத்தில் காமெடிக்காக சேற்றை வாரி இறைத்துக் கொண்டிருந்தவர் மீது இன்னொரு நண்பர் சேற்றை வாரி வீசுகிறார். சேற்றை வாங்கியவருக்கு கடும் கோபம் ஏற்பட்டு, சேற்றை வாரி இறைத்தவரை பழிவாங்க வேண்டும் என உடனடியாக அடிக்க ஓடுகிறார். அப்போது மீண்டும் அதேசேற்றில் கால் வழுக்கிவிட்டு விழ நேரிடுகிறது. இந்த வீடியோ காண்போருக்கு பெரும் நகைப்பை ஏற்படுத்திவிடுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 


மேலும் படிக்க | Viral Video: சிவனடியார்களை மிஞ்சிய ஆடு - கங்கை கரையில் சிவ வழிபாடு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ